செவ்வாய், 7 ஜூன், 2011

அதிமுகவினர் வசமாகுமா டாஸ்மாக் பார்கள்? பார்கள் ஏலம் எடுப்பது

தமிழகத்தில் தனியாரிடமிருந்து மதுபான கடைகளை 2001-06ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது அரசுடையாக்கப்பட்டுஅரசே 6 ஆயிரத்து 300 டாஸ்மாக் கடைகளை திறந்தது. மேலும் மதுபான கடைகளை ஓட்டி மதுபானங்களை உட்கார்ந்து குடிக்கும் வண்ணம் பார்களை அமைக்கவும், அதனை தனியாருக்கு ஓப்பந்தம் விடப்பட்டு மொத்த அரசு இயந்திரமும் மதுபான கடை வசூல் மூலம் இயக்கப்பட்டன.

கடந்த திமுக ஆட்சியின் போது அதிமுகவினர் துணையோடு மதுபான பார்களை ஏராளமான திமுகவினர் கைப்பற்றினர். இதுவே அடுத்த வந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவினர் வெற்றிக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தியது. அதே நிலை தற்போதும் உருவாகும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. தற்போது வரும் 22ம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் டாஸமாக் பார் ஏலம் நடைபெற உள்ளது. தமிழத்தில் உள்ள 6300 மதுபான கடைகளுக்கும் 6300 பார்கள் உண்டு. ஆனால் இதில் சுமார் 1000 பார்கள் வரை பணம்கட்ட முடியாமலும், திறக்கமுடியாமலும் உள்ளதை கழித்து சுமார் 5 ஆயிரம் பார்களுக்கு ஏலம் நடைபெறுகிறது.

அதி்முக ஆட்சி ஏற்பட்டு விட்டதால் பல மாவட்டங்களில் அதிமுகவினர் தேர்தல் முடிவுக்கு பின்னர் பார்கள் ஏலம் எடுப்பது குறித்து தீவிர ஆலோசனையி் ஈடுபட்டுள்ளனர். அதி்முகவின் முக்கிய புள்ளிகளை ஏற்கனவே கடந்த ஆட்சியில் பார் ஏலம் எடுத்து பணம் பார்த்த புள்ளிகள் வலை வீசி வளைக்கும் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் தற்போது எம்எல்ஏ ஆகியுள்ளவர்களும், மாவட்ட,ஓன்றிய, நகர செயலாளர்களும் டாஸ்மாக் பார் ஏலத்தில் கலந்து கொள்ள மும்முரம் காட்டி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் குற்றாலம், தென்காசி, நெல்லை, ஆலங்குளம், சங்கரன்கோவில், தமிழக-கேரள எல்லையான செங்கோட்டை, புளியரை போன்ற பகுதிகளுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

தென்காசி, குற்றாலம், சுரண்டை போன்ற பகுதிகளில் முன்ணனி நாளிதழ் நிருபர்களும் மதுபான கடை பாரை கைப்பற்ற முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே கடந்த ஆட்சியில் காட்டிய சலுகைகளை இந்த ஆட்சியிலும் பெரும் முயற்சியில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். கடந்த திமுக ஆட்சியின் போது சபாநாயகராக இருந்த இரா. ஆவுடையப்பனின் உதவியாளர் ஒரு திமுக பிரமுகருக்கு மதுபான பார் ஓதுக்க சொல்லி கொடுத்த சிபாரிசு கடித்ததால் சட்டசபையில் அமளி, வெளிநடப்பு போன்றவைகள் அதி்முக எம்எல்ஏக்களால் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வரும் உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு இந்த மதுபான கடை பார் ஏலம் அமைய அதிக வாய்ப்புகள் உள்ளது.

English summary
ADMK functionaries are getting ready to capture Tasmac bars in Tamil Nadu. Nearly 5000 bars are coming to auction on June 22. Keeping the local body polls in mind ADM functionaries are planning to capture the bars in auction.

கருத்துகள் இல்லை: