வியாழன், 9 ஜூன், 2011

ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு




தமிழக முதல்வர்ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையை, ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைத்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கு, பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் 08.06.2011 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கெனவே விசாரிக்கப்பட்ட 10 சாட்சிகளிடம் மறு விசாரணை நடத்தக் கோரி சசிகலா தரப்பு வழக்கறிஞர் எம்.எஸ்.கந்தசாமி, ஜூன் 3 ல் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி மல்லிகார்ஜுனையா உத்தரவிட்டார்.

ஆடிட்டர் பாலாஜியிடம் மறுவிசாரணைக்கு கோரிய மனுவை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் விசாரணை இப்போது நடைபெற்று வருவதால், அந்த உத்தரவு வரும் வரை ஒரு வார காலத்துக்கு இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு சகிகலா தரப்பில் வழக்கறிஞர் எம்.எஸ்.கந்தசாமி மனு தாக்கல் செய்தார்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு உதவி வழக்கறிஞர் சந்தீப்செளிட்டா, உச்சநீதிமன்றமும், கர்நாடக உயர்நீதிமன்றமும் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கு விசாரணையை தினமும் மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் கர்நாடக உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கலாம் என்பதால், சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை அன்றைக்கே (வியாழக்கிழமை) ஒத்திவைக்கலாம். ஒருவார கால அவகாசம் அளிப்பது அதிகம் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஒருவாரம் ஒத்திவைக்கக் கோரும் எதிர்தரப்பு வழக்கறிஞரின் மனுவை ஏற்று, அடுத்த விசாரணையை ஜூன் 15 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை: