கறுப்பு பண முதலாளிகளுடன் தொடர்புடைய ராம்தேவ் : உண்ணாவிரதம் இருப்பது கேலிக்கூத்தானது : நாராயணசாமி
புதுச்சேரி : ""பாபா ராம்தேவுக்கு கறுப்பு பண முதலாளிகளுடன் தொடர்புள்ளது. இவர் கறுப்பு பணத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பது கேலிக்கூத்தானது,'' என்று, மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார். புதுச்சேரியில் நேற்று, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்பதற்கு, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்தியில் பா.ஜ., மற்றும் ஜனதா தளம் ஆட்சி செய்த போது, லோக்பால் மசோதா கொண்டு வரப்பட்டது. அப்போது ஒருமித்த கருத்து இல்லாததால் காலாவதியாகி விட்டது.
தற்போது, லோக்பால் சட்ட மசோதாவை பார்லிமென்டில் கொண்டு வர சட்ட வரையறை தயாரிக்கும் பணி நடக்கிறது. மசோதாவில் பிரதமரை விசாரணையின் வரைமுறைக்கு கொண்டு வரலாமா, பார்லிமென்டின் உள்ளேயே நடைபெறும் நடவடிக்கையை எடுத்துக் கொள்ளலாமா, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உள்ளிட்ட மற்ற நீதிபதிகளை விசாரிக்க அனுமதி உண்டா என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளதால், சட்ட மசோதாவை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பாபா ராம்தேவ், வெளிநாட்டில் பதுக்கி வைத்திருந்த கறுப்பு பணத்தை இந்தியாவிற்கு திரும்பிக் கொண்டு வருவது தொடர்பாக உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தார். மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, கபில் சிபல் ஆகியோர் ராம்தேவுடன் பேச்சு நடத்தினர். கோரிக்கை தொடர்பாக மத்திய அரசின் முடிவை பதிலாக கொடுப்பதாக தெரிவித்தனர். அரசு பதில் வந்த உடன், உண்ணாவிரதத்தை கைவிடுவதாக அறிவித்தார்.
ஆனால், இதை மீறி ராம்தேவ் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். உண்ணாவிரதத்தின் போது, ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் மற்றும் பா.ஜ., இந்து பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் பங்கேற்றனர். உண்ணாவிரதத்திற்கு நூறு கோடி ரூபா# செலவு செய்யப்பட்டுள்ளது. பாபா ராம்தேவுக்கு கறுப்பு பண முதலாளிகளுடன் தொடர்புள்ளது. இவர் கறுப்பு பணத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பது கேலிக்கூத்தானது.
வாஜ்பாய் தலைமையில், மத்தியில் ஏழு ஆண்டு கால பா.ஜ., ஆட்சியின் போது, வெளிநாட்டிலுள்ள கறுப்பு பணத்தை கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, மன்மோகன் தலைமையிலான மத்திய அரசு, கறுப்பு பண பதுக்கல் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 147 நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. கறுப்பு பண பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, 54 சிறப்பு தனி நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன.
லோக்பால் மசோதா, வரும் மழைக்கால கூட்டத் தொடரிலேயே கொண்டு வருவதற்கான நடவடிக்கையை, மத்திய அரசு எடுத்து வருகிறது. பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்தை தூண்டிவிட்டு பா.ஜ., ஆட்சி கவிழ்ப்பு வேலையை செய்து வருகிறது. ஊழலைப் பற்றி பா.ஜ.,பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. கருப்பு பணத்தை பற்றி பேச, பா.ஜ.,விற்கு தகுதியில்லை.
புதுச்சேரி காங்.,தோல்விக்கான காரணம் பற்றி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தோல்வியடைந்தவர்கள், தொண்டர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இதன் பிறகு, காரணம் குறித்து தெரிவிக்கப்படும். முதல்வராக பொறுப்பேற்றுள்ள ரங்கசாமி, இலவச அரிசி திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக