திங்கள், 6 ஜூன், 2011

Imelda Sukumar.G.AJaffna பயமுறுத்தல்களுக்கும் முகங்கொடுக்க வேண்டி யேற்பட்டது.

இமெல்டாவின் துணிச்சல்
imelda-4அண்மையில் நோர்வேயில் கைது செய்யப்பட்ட நெடியவன் குறித்தும் யாழ். அரச அதிபர் இமெல்டா ஒரு கருத்தினை முன்னர் தெரிவித்திருந்தார். நாட்டில் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பின்னரும் வெளிநாட்டிலிருக்கும் புலித்தலைவரான நெடியவனால் தொலைபேசி மூலமாக அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டம் எனக் கூறிக்கொண்டு அதே தமிழ் மக்களைப் பணயக் கைதிகளாக வைத்துத் தமது தேவைகளை நிறைவேற்றி வந்த விடுதலைப் புலிகளின் அந்தரங்கங்கள் பலவற்றைத் துணிச்சலுடன் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் வெளியிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற 'பயங்கரவாதத்தை ஒழித்ததில் இலங்கையின் அனுபவம்" எனும் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டுரையாற்றுகையிலேயே அரச அதிபர் இமெ ல்டா தனது கருத்துக்களை வெளிப்படையாகவும், துணிச்சலுடனும் தெரிவித்திருக்கிறார்.

திருமதி இமெல்டா சுகுமார் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசாங்க அதிபராக பத்து வருடங்களுக்கு மேலாகக் கடமையாற்றியவர். புலிகள் இருந்த போது அவர்க ளது ஆயுத முனையிலான அதிகாரத்தின் கீழ் அரசாங்கத்தின் உயரதிகாரியாகக் கடமையாற்றிய திருமதி. இமெல்டா பல்வேறு இன்னல்களுக்கும், பயமுறுத்தல்களுக்கும் முகங்கொடுக்க வேண்டி யேற்பட்டது. தானொரு அரசாங்க உயரதிகாரியாக இருந்தும் புலிகளது கட்டுப்பாட்டுப் பகுதியில் கடமையாற்றியதனால் பொறுமையாக இருந்து மக்களுக்குத் தன்னாலான சேவையைச் செய்து வந்துள்ளார். அவரது துணிச்சலையும், சேவை மனப்பான்மையையும் உண்மையில் பாராட்டத்தான் வேண்டும்.

பயங்கரவாதத்தை ஒழித்த இலங்கையின் அனுபவத்தைப் பகிரவென வந்திருந்த உலக நாடுகளின் பிர திநிதிகள் மற்றும் பன்னாட்டு இராணுவ உயரதிகாரிகள் மத்தியில் யாழ். அரச அதிபர் தெரிவித்த கருத்துக்கள் உள்நாட்டில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. விடுதலைப் புலிகள் தொடர்பாக இதுவரை காலமும் வெளிவராத பல தகவல்கள் இவர் மூலமாக இப்போது வெளியாகியிருப் பதனால் ஊடகங்கள் பலவற்றிலும் இவரது இச்செய்திக்கு முக்கியத்துவம் அளித்துள்ளன.

ஓர் அரசாங்க அதிகாரியாக இருந்த போதிலும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த மக்களுக்குத் தன்னால் உதவிகள் புரிவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு புலிகள் தடையாக இருந்துள்ளனர் என் றும் தமிழ் மக்களைப் புலிகள் கேடயமாகப் பயன்படுத்தியே போராட்டத்தை நடத்தி வந்தனர் என்றும் இமெல்டா தெரிவித்திருக்கிறார். கஷ்டப்பட்ட மக்களுக்காக மத்திய அரசாங்கத்திடமி ருந்து உதவிகள் பெறுவதற்காக விண்ணப்பித்தால் புலிகள் அதனைத் தடுத்து நிறுத்தினர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த சு. ப. தமிழ்ச்செல்வனால் இதுபோன்ற நெருக்குதல்கள், பயமுறுத்தல்கள் பாரியளவில் தனக்கு விடுக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர் அத்தகைய கொடுமைகளைச் செய்த புலிகளின் பிடியிலிருந்த பொதுமக்களை இலங்கை அரசாங்கம் இராணுவத்தினர் மூலமாக மீட்டெடுத்து இன்று சுதந்திரமாக வாழ வைத்தமைக்காகத் தான் நன்றி கூறுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

உண்மையில் அரச அதிபர் இமெல்டா தனது பதவிக் காலத்தில் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட மக்கள் மீதான அடக்குமுறைகளை நேரடியாகவே கண்டவர். அத்துடன் அவரது பணியைச் செய்யவிடாது புலிகள் தடுத்தும் வந்துள்ளனர். தமிழர் தாயகத்தில் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என் பதை உலக நாடுகளுக்குக் காட்டுவதற்காக தம்மால் மேற்கொள்ளப்படும் அட்டூழியங்களை ஊடகங்களுக்குத் தெரிவிக்கக் கூடாது எனவும் புலிகள் இவரை அச்சுறுத்தி வந்துள்ளனர். இவர் போன்ற அரச துறையிலிருந்த பல உயரதிகாரிகளையும் அன்று புலிகள் பயமுறுத்திப் பல காரி யங்களைச் செய்துள்ளனர்.

இறுதி யுத்தத்தின் போது பொதுமக்களைப் பணயக் கைதிகளாக வைத்துக் கொண்டு தாம் தப்பித்துக் கொள்வதற்குப் புலிகள் நடத்திய நாடகம் எல்லோரும் அறிந்ததே. கடைசியில் எதுவுமே பலிக்காத காரணத்தினால் தமது மக்களில் பலரைத் தாமே சுட்டுக்கொன்றுவிட்டு அரச படைகள் மீது பழியையும் போட்டனர். பொதுமக்களைப் பணயக் கைதிகளாக வைத்து புலிகள் யுத்தம் புரிந்தார் கள் என்பதற்குப் பல சாட்சிகள் உள்ளன. இதனை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா. கன கரட்ணமும் தனது சாட்சியாகத் தெரிவித்துள்ளார். இன்று அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரும் அவ்விடயத்தை உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஆனால் இவை எதையும் நம்பாதது போன்று ஐக்கிய நாடுகள் சபையானது தனது நிபுணர் குழு அறி க்கையில் இலங்கை அரசாங்கத்தைக் குற்றம் சாட்டியுள்ளது. தனது மக்களையே கொடுமைப் படுத்தி அவர்களுக்கு உணவு கிடைக்கவிடாது தடுத்து பணயக் கைதிகளாக வைத்திருந்து போராடிய ஒரு இயக்கத்தை உலகில் வேறெந்த நாட்டிலுமே காணமுடியாது. தமது மக்களுக்கான உரி மைப் போராட்டம் எனக்கூறி தமது உயிர்களுக்கு ஆபத்து என்றதும் அந்த மக்களையே சுட்டுக் கொன்ற கொடூரமான இயக்கத்தையும் உலகில் எங்குமே காண முடியாது.

எனவே யாழ். அரசாங்க அதிபரின் கூற்றுக்கள் வெறுமனே சோடிக்கப்பட்ட அல்லது கற்பனை கலந்த கூற்றுக்கள் அல்ல. நேரடியாகக் களத்தில் நின்று கண்ட காட்சிகளின் விம்பங்கள். அதனை வெறு மனே செய்தி எனக்கூறித் தட்டிக் கழித்து விடமுடியாது. ஐக்கிய நாடுகள் சபையின் தருஸ்மன் அறிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் ஒரு ஆதாரபூர்வமான சாட்சி இது. இதனை அரசாங்கம் உரிய இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

அத்துடன் அண்மையில் நோர்வேயில் கைது செய்யப்பட்ட நெடியவன் குறித்தும் யாழ். அரச அதிபர் இமெல்டா ஒரு கருத்தினை முன்னர் தெரிவித்திருந்தார். நாட்டில் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பின்னரும் வெளிநாட்டிலிருக்கும் புலித்தலைவரான நெடியவனால் தொலைபேசி மூலமாக அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். நெடியவனின் கைது தனக்கு நிம்மதியைத் தருவதாக அவர் தெரிவித்திருந்தார். அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படக் கூடாது என்பதே நெடியவனின் பயமுறுத்தலாக இருந்துள்ளது. அன்று தமிழ்ச் செல்வனும் இதனையே செய்து வந்தார்.

ஓர் அரச அதிகாரி எத்தகைய பயமுறுத்தலுக்கெல்லாம் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. துணிச்சல் மிக்க இப்பெண்மணியைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும். அத்துடன் புலிகளின் கொடுமைகளையும், பயமுறுத்தல் செயற்பாடுகளையும் துணிச்சலாகக் கூறிய அவரைப் பாராட்ட வும் வேண்டும்
.
- தினகரன் -

கருத்துகள் இல்லை: