கனிமொழி மீது நடைபெற்று வரும் கடும் கெடுபிடிகளை யாரும் எதிர்பார்கவில்லை. அவரது அரசியல் எதிரிகளே கூட அவரைப்பற்றி நல்ல அபிப்பிராயமே வைத்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால் அவரது சிறை வாசம் உண்மையில் எல்லோரையும் கவலைப்பட வைத்துள்ளது.
சொந்த வாழ்விலோ அரசியல் வாழ்விலோ யாருக்கும் ஒரு எதிரியாக என்றுமே இருந்திருக்காத ஒரு நல்ல ஜீவன்.
அவர் செய்த குற்றம் எது வென்று பார்த்தால்
அவர் எப்போதும் சமுகத்தின் அடித்தள மக்களுக்கு சார்பான நிலையே எடுத்துள்ளார்.
மேட்டுக்குடிகளுக்கும் ஜாதிபேய்களுக்கும் அவர் கசப்பானவராக இருக்கிறார்.
தந்தை பெரியாரை மனதிற்குள் வைத்திருக்கிறார்.
எந்தக்காலத்திலும் பார்ப்பனியத்தினால் பணிய வைக்க முடியாதவராக இருக்கிறார்.
சென்னை சங்கமம் போன்ற நிகழ்சிகள் மூலமும் கலைஞர் டிவி மூலமும் இன மான கலைகளுக்கு புத்துயிர் கொடுத்து வருகிறார்.
திமுகவுக்கு ஸ்டாலினையும் விட அழகிரியையும் விட( திராவிட கழக பெரியாரின்) சரியான வாரிசாக கனிமொழி பரிணமிக்கிறார்.
இதை திமுகவினர் இன்னும் சரியாக உணராவிடினும் வடநாட்டு ஜாதிபேய்கள் சரியாக உணர்ந்திருபதைதான் கனிமொழி கைது காட்டுகிறது.
இதை திமுகவினர் இன்னும் சரியாக உணராவிடினும் வடநாட்டு ஜாதிபேய்கள் சரியாக உணர்ந்திருபதைதான் கனிமொழி கைது காட்டுகிறது.
எத்தனையோ வழக்குகளில் இருந்து அய்யங்கார் ஆத்து ஜெயலலிதா மிகவும் ஈசியாக விடுபட்டுக்கொண்டே இருக்கிறார். அவரின் சிறுதாவூர் தோட்டம் கூட இன்னும் அவரே வைத்திருக்கிறார்.
ஜெயா விடயத்தில் கவனமாக நோகாமல் காய் நகர்த்தும் நீதி மன்றங்கள் கனிமொழி விடயத்திலும் தாழ்த்தப்பட்ட ராசா விடயத்திலும் காட்டும் அவசரம் ஏனோ அருந்ததி ராய் இந்திய நீதி மன்றங்களை பற்றி எழுதியவையை மீண்டும் படிக்க தூண்டுகிறது.
நீதித்துறை ஊழல் பற்றி பலரும் கண்டனகள் தெரிவித்து வருவதை கூர்ந்து கவனித்தால் எல்லாம் விளங்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக