புதன், 27 அக்டோபர், 2010

Sivajilingam:தமிழ் அரசியல் கட்சிகளின் தீர்வுத்திட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் முன்வைக்கப்படும்


தேசிய இனப்பிரச்சினைக்கான தமிழ் அரசியல் கட்சிகளின் தீர்வுத்திட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் முன்வைக்கப்படும் என தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் 10தமிழ் அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இக்கட்சிகளில் ஈ.பி.டி.பி. பொதுச்செயலர் டக்ளஸ் தேவானந்தா மட்டும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். எதிர்வரும் சனிக்கிழமை மீளவும் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கூடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இதுவரையில் பத்து சந்திப்புக்கள் நடத்தப்பட்டுள்ளது. சந்திப்புக்களில் சாதமானநிலை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் 28 அல்லது 29ம் திகதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இதன்போது கூட்டமைப்பில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படவுள்ளது என்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: