திங்கள், 25 அக்டோபர், 2010

குவைத் நாட்டிலிருந்து உடல் செயலிழந்த நிலையில் நாடுதிரும்பிய பணிப்பெண்

குவைத் நாட்டில் வீட்டுப்பணிப் பெண்ணாக தொழில் புரிந்துவந்த    யுவதியொருவர் அவ்வீட்டு உரிமையாளர்களினால் கடுமையாகத் தாக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட நிலையில் நாடு  திரும்பியுள்ளார்.
டயகம – கிழக்கு தோட்டத்தின் முதலாம் பிரிவைச் சேர்ந்த நதிகா டிலுக்ஷி (வயது 21) என்பவரே இவ்வாறு தாக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…., கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி வெளிநாட்டு  முகவர் ஒருவரினால் குவைத்நாட்டு   வீட்டுப் பணிப்பெண்ணாக சென்ற இவர்,     இரண்டு வருடங்கள் கடந்த     நிலையில்   தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
இவர் தொழில் செய்துவந்த காலத்தில் வீட்டு உரிமையாளர்களினால் இரும்பு கம்பிகளினால் தலையில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அத்துடன், இவரது இடது பக்கத்தின் கண், காது, கை, கால் என்பன செயலிழந்துள்ளன.
இவர் கடந்த 25 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளார். நாடு திரும்பிய அவரை உறவினர்களால் அடையாளம் காணமுடியாது போனதாகவும் மிகவும் கடுமையான சுகயீனற் முறிருந்தமையே அதற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, உடனடியாக லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக     நுவரெலியா   மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, கடந்த ஒன்றரை மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் வீடு திரும்பியுள்ளார்.
இதேவேளை, இவ்விடயம் தொடர்பாக டயகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப் பட்ட யுவதி சார்பில் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: