!
தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் புலி போராளிகளின் விபரங்களை இன்று இணையத்தில் வெளியிடுகிறது. தடுப்பு முகாம்கள், சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் பற்றிய விபரங்கள் இன்று இணையத்தில் வெளியிப்படவுள்ளதாக இலங்கை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார். இலங்கையின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிவின் இணையத்தளத்தை நேற்று யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டியூ.குணசேகர ஆரம்பித்து வைத்தார்.
யாழ்.அரசசெயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் டியூ.குணச்சேகர, இன்று சனிக்கிழமை தொடக்கம் இணையத்தளத்தில் தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள், புனர்வாழ்வு பெறுவார், சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் விபரங்களைப் பார்வையிட முடியும்“ என்று தெரிவித்தார்.
http://www.bcgrsrilanka.com என்ற இணையத்தளத்திலேயே இந்த விபரங்கள் வெளியிடப்படவுள்ளதாக அவர் அறிவித்தார்.
தடுப்புமுகாம்கள், சிறைச்சாலைகளில் உள்ள தமிழர்களின் விபரங்களை வெளியிடுமாறு இலங்கை அரசுக்கு அண்மைக்காலமாக அழுத்தங்கள் அதிகரித்து வந்த நிலையலேயே அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. இதனிடையே, நேற்று யாழ்.செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசியபோது. அரசியல் கைதிகளின் விபரமும் இந்த இணையத்தில் வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் டியூ.குணசேகர கூறியிருந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக