- எஸ்.எம்.எம்.பஷீர்
என்ன தீர்ப்பு வருமோ , எமது பிள்ளை மீண்டும் எம்மிடம் வருவாளோ என்று பதைபதைப்புடன் காத்திருந்த ரிசானா நபீகாவின் பெற்றோர் உறவினர் இப்போது வெளியாகிருக்கும் ரியாத் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை கண்டு அதிர்ச்சி யடைந்திருக்கிறார்கள். அந்த சிறுமி குடும்ப வறுமைக் கொடுமைகளை தனது இளமை பிராயத்தில் தாங்கிக் கொண்டு தனது குடும்ப நலனுக்காக அயல் நாட்டில் பனிப்பெண்ணாக பிழைக்கப்போய் இறுதியில் சிசுக் கொலைக்காக உயிரை இழக்கப் போகிறாளே என்ற கவலை காரணமாக அவரது விடுதலைக்காக குரல் கொடுத்த மனித உரிமை வாதிகள் மனித உரிமை நிறுவனங்கள் அதிலும் குறிப்பாக மேன் முறையீட்டுக்கான செலவினை க்ஹடெப் அல்ஷமரி ( Al-Shammary) எனும் சவூதியிலுள்ள சட்ட நிறுவனத்துக்கு வழங்கிய ஆசிய மனித உரிமை ஆணையகம் (Asian Human Right Commission) என்பன மிகுந்த ஏமாற்றத்தை அடைந்துள்ளன.
தான் பணியாற்றிய வீட்டு உரிமையாளரின் குழந்தையை ரிஷானா மே மாதம் 22ம் திகதி 2005ம் ஆண்டு கொலை செய்ததாக 16ம் திகதி ஜூன் மாதம் 2007 ஆம் ஆண்டில் டவாதமி (Dawadami High Court) உயர் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தது. அத் தீர்ப்புக் கெதிரான ரிசான நபீக்கின் மேன் முறையீட்டை ரியாத்தில் உள்ள உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதுடன் டவடாமி மேல் நீதி மன்றினால் வழங்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்பினை உறுதி செய்துள்ளது.
அந்த பெண்ணின் குடும்பத்தினரை இவ்வருட ஆரம்பத்தில் சந்திப்பதற்காக அவர்கள் வாழும் மூதூர் கிராமத்துக்கு சென்றபோது அவர்களின் வறுமை நிலையையும் தமது மகளை மீன்டும் காண்போமோ என்று ஏங்கும் துயரத்தையும் உனர்ந்து கொள்ள நேரிட்டது. முடியுமானால் அந்த துரதிஸ்டமான பெண் பிள்ளைக்கு உத முடியுமா என்ற எனது முயற்சியில் ராஜரீய (Diplomatic) தொடர்புகளிலிருந்து எதுவுமே சட்ட பூர்வமாக செய்ய முடியாதென்பதுடன் அதற்கான வாய்ப்புக்களும் இல்லை என்பது தெளிவானது. ஆனாலும் எனது சவூதி நண்பர் மூலம் பிராதுகாரர்களான இறந்து போன குழந்தையின் பெற்றோர்களை சந்தித்து அவர்களின் மன்னிப்பை பெறும் சாத்தியம் உன்டா என்பதும் சாத்தியமற்றது என்பதை எனது அது தொடர்பான விசாரணைகள் புலப்படுத்தின என்றாலும் ரியாத் உச்ச நீதிமன்ற மேன் முறையீட்டு வழக்கில் பிரதிவாதியான ரீசானாவின் சார்பில் ஆஜரான சட்ட நிறுவனத்துடன் அதன் நிர்வாகியான சட்டத்தரணியை எனது சவூதி பிரஜையும் நண்பருமாமான அப்துல்லாஹ் ( அவரின் முழுப் பெயரை தவிர்த்துள்ளேன்) இவ்வழக்கு சார்பில் என்ன நடை பெறுகிறது என்பதை அவ்வப்போது அறிந்து கொண்டேன்.
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் அவர தமது சான்றுகள் மிகவும் பலமாக உள்ளதாக நம்பியதுடன் இவ்வழக்கின் தீர்ப்பு தாமதமாகி கொன்டு போவதால் மேலதிக விசாரணைகள் முதல் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றுடன் மேற்கொள்ளப்படுவதால் அவருக்கு இந்த வழக்கில் ரிசானா விடுவிக்கப்படலாம் என்ற நம்பிக்கையும் ஏற்படத்தொடங்கியது அதனை நான் கேள்வியுற்றவுடன் அதனை ரிசானாவின் பெற்றொருக்கு தெரிவிக்குமாறு அம்மாவட்ததில் வாழும் எனது நண்பர் ஒருவரையும் கேட்டுக்கொண்டேன். ஆனால் பின்னர் சில மாதங்கள் கழித்து ஒரு நம்பிக்கையீனமான ஒரு செய்திதான் எனது நண்பர் மூலம் எனக்கு கிடைத்தது. நானும் நல்லது நடக்க வேன்டும் என்ற எதிர்பார்ப்புடன் விசாரனையற்று இரு தரப்பு சாட்சியங்களின் சான்றுகளையும் (Evidence) சமர்ப்பணங்களையும் (Submissions) அடிப்படையாக கொண்டு உச்ச நீதிமன்றம் டவடாமி மேல் நீதிமன்றுடன் தொடர்புகொன்டு சில சம்பவம் சான்றுகள் தொடர்பான தெளிவுபடுத்தல்களையும் (Clarifications) அடிப்படையாகக் கொண்டு இவ்வழக்கினை நிராகரித்துள்ளது.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட குழந்தையின் பெற்றோர் மன்னிப்பளிக்கும் பட்சத்தில் மாத்திரமே ரிஷானா தண்டனையில் இருந்து தப்பிக்க வாய்ப்பிருக்கிறது என்ற கருத்து வலுவடைந்து வருகிறது. ஆனால் அக் குழந்தையின் பெற்றோர் குறிப்பாக அக்குழந்தையின் தாய் அவ்வாறான ஒரு மன்னிப்பு வழங்க தயாராகவில்லை என்பது முன்னரே இது தொடர்பில் இலங்கை அரசு மற்றும் சிலரினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மூலம் முடியாமல் போனதாக சில தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலயிலேயே ரிஷானா நபீக்குக்கு மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவுதி மன்னரிடம் கோரிக்கைவிடுக்கவுள்ளதாக ஊடக செய்திகள் கூறுகின்றன. இப்போது செய்ய வேண்டியது சகல மனித உரிமை ஸ்தாபனங்கள் உட்பட எல்லா சமூக சமய ஸ்தாபனங்களும் சவூதி மன்னருக்கு இதில் தலையிட்டு இம்மரண தண்டனையை நிறுத்துமாறு கருனை மணுவொன்றினை செய்வதுதான் அவசியமும் அவசரமுமான பணியாகும். இதனையே எனது சவூதி நண்பரும் கூறியத்துடன், அவ்வாறு செய்யுமாறு ரிசானாவுக்காக மேன் முறையீடு செய்த வழக்கில் ஈடுபட்ட சட்ட நிறுவன தலைமைச் சட்டத்தரணி அல் ஷம்மாரி கருத்து வெளியீட்டதாகவும் குறிப்பிட்டார். தத்தம் நாட்டிலுள்ள சவூதி தூதுவராலயங்கள் மூலம் இவ்வாறான வேண்டுகோளை சவூதி மன்னருக்கு செய்வதில் தாமதிக்கமுடியாது ஏனெனில் வரப்போகும் எந்த ஒரு வெள்ளிக்கிழமையும் அந்த துரதிஸ்டமான பெண் பிள்ளையின் அந்திம நாளாகவிருக்கலாம்...
sbazeer@yahoo.co.uk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக