செவ்வாய், 26 அக்டோபர், 2010

பெண் சிசு கொலை குறைந்துள்ளது: சல்மா

பெண்கள் முன்னேற்றத்திற்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக சமூக நலவாரிய தலைவர் சல்மா தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் தினத்தையொட்டி சமூக நலவாரியம் மற்றும் சமூக நல இயக்கம் சார்பில் சென்னையில் ஓவியம் உள்பட அறிவு திறன் போட்டிகள் நடைபெற்றன. இதில் சுமார் 1500 குழந்தைகள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியை துவங்கி வைத்து பேசிய தமிழக சமூக நலத்துறை வாரிய தலைவர் சல்மா,
தமிழகத்தில் பெண் சிசு கொலை குறைந்துள்ளது. பெண்களின் முன்னேற்றத்திற்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு இருக்கிறது. பெண்களுக்கு திருமண உதவித் திட்டம், மகப்பேறு உதவித் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தமிழக முதல்வர் கருணாநிதி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார் என்றார்.

கருத்துகள் இல்லை: