ஞாயிறு, 24 அக்டோபர், 2010

மிக வேகமாக முன்னேறி வரும் திருமலை!

மூன்று திசைகளிலும் மலைகளைக்கொண்டு கடலால் சூழப்பட்டு பல அதிசயத்தக்க விடயங்களை தன்னகத்தே கொண்ட குடா, திருகோணமலை மாவட்டமாகும். இலங்கையர்களை மட்டுமல்லாது வெளிநாட்டவர்களையும் வெகுவாக கவர்ந்திழுத்த மாவட்டமும் இதுவேயாகும். ஒல்லாந்தர் காலம் தொட்டு இலங்கைக்கு பல வழிகளில் சிறந்த வருமானத்தை ஈட்டித்தந்த இப் பிரதேசம் கடந்ந பல வருடகாலமாக நடைபெற்றுவந்த யுத்த்தினால் தனது அந்தஸ்தை சற்று இழந்திருந்தது. சமாதானத்தின் நகரம் என பெயர்சூடப்பட்டு மூவின மக்களும் இணைந்து வாழும், இங்கே அடிக்கடி இடம்பெற்று வந்த அமைதி இன்மையினால் மக்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்தனர். சுதந்திரமாக வெளியே செல்ல முடியாத நிலைமை, சுகந்திரமாக பேச முடியாத அளவுக்கு நிலைமை ஏற்பட்டிருந்தது.

கடந்த வருடம் முதல் பயங்கரவாதம் நாட்டில் முடிவுக்குக்கு வந்ததைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட அனைத்து இன்னல்களையும் மறந்து இன்பத்தை நோக்கி தமது புதிய வாழ்கையை நகர்த்த ஆரம்பித்துள்ளனர்.

இயற்கையாக பாதுகாப்பு அரண்களுடன் மைந்துள்ள துறைமுகத்தையும், அதிசயத்தக்க கன்னியா வெண்ணீர் ஊற்றுகள், பல அழகான கடற்கரைகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளில் பெரும் பங்காற்றும் தொழிற்சாலைகள், பாரிய மீன்பிடி வலயங்கள் போன்றவற்றைக் கொண்ட பிதேசமாகும்.இது புதிய எளிச்சயை நோக்கி நகர்கின்றது. சுற்றுலா பிரயாணிகளை வெகுவாவ கவர்ந்து வரும் இப்பிரதேசத்தை சுற்றுலா துறையில் முன்னேற்றும் முகமாக பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுத்து வரப்படுகின்றது.

பல வளைவுகளைக்கொண்டு சேதமடைந்த நிலையில் காணப்பட்ட ஹபரனை தொடக்கம் திருகோணமலை வரையிலான பாதை பல மில்லியன் ரூபாய் செலவில் நீண்ட கால பாவனைக்கு ஏற்ற வகையில் மிகச் சிறந்த முறையில் நிர்மானிக்கப்ட்டுள்ளது. 3 தொடக்கம் 4மணித்தியாலங்கள் பயணம் செய்ய எடுத்த இப்பாதையில் தற்போது ஒரு மணித்தியாலத்திலே பயணிக்க கூடியதாக உள்ளது.
மிக நீளமானதும் அழகானதுமான நிலாவெளிக் கடற்கரைக்கு தற்போது மிக அதிகளவிலான சுற்றுலா பிரயாணிகள் வருகை தருகின்றனர். எனவே அங்கு நட்சத்திர உல்லாசவிடுதிகளை அமைப்பதற்கான நிர்மாணப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்பிரதேசம் அபிவிருத்தியடைவதோடு, இம்மக்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் வாய்ப்பும்தோன்றியுள்ளது.

புறாமலைஎன்று அழைக்கப்படும், கடலுக்கு நடுவில் அமைந்துள்ள தீவிற்கு செல்வதற்கு இராணுவத்தினரால் நீண்டகாலமாக விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் உலகப் பிரசித்திப்பெற்ற இந்துக்களின்திருக்கோணேஸ்வர ஆலயம்”, கன்னியா வெண்ணீர் ஊற்று, இலங்கையில் மிக நீளமான கிண்ணியாப் பாலம் போன்ற பல இடங்களையும் உல்லாச பிரயாணிகள் தரிசித்து வருகின்றனர்.
இச் சுற்றுலாத்துறை மூலம் பல்வேறு வழிகளில் வருமானத்தை இங்குள்ள மக்கள் பெற்று வருகின்றனர். இதன்மூலம் தமது வாழ்கைத்தரக்தை உயர்த்தி கொள்ளுவதுடன் சுமூகமாகவும், நிம்மதியாகவும், சந்தோசமாகவும் தமது வாழ்கையை கொண்டு நடாத்துகின்றனர். எனவே இப்பகுதி மக்களின் சுமூகமான வாழ்வுக்கு காரணம் கடந்த வருடம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட யுத்தம், என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

கருத்துகள் இல்லை: