தனது மகன் துரை தயாநிதி எனப்படும் தயாநிதி அழகிரியின் திருமணத்திற்கு நடிகர்கள் ரஜினிகாந்த் , கமல்ஹாசன் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது குடும்பத்தோடு சென்று நேரில் அழைப்பு வைத்தார்.
தயாநிதி அழகிரிக்குத் திருமணம் முடிவாகியுள்ளது. முதலில் தனது தந்தையும், முதல்வருமான கருணாநிதியை, தனது மனைவியுடன் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழைக் கொடுத்தார் அழகிரி.
பின்னர் தனது சகோதரர் மு.க.ஸ்டாலினுடன் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து அவருக்கும் அழைப்பு வைத்தார்.
இதையடுத்து சென்னை திரும்பிய அழகிரி தற்போது பிரபலங்களுக்கு நேரில் அழைப்பு வைக்க ஆரம்பித்துள்ளார். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை தனது மனைவி காந்தி அழகிரி, மகள் கயல்விழி, மருமகன் ஆகியோருடன் சென்று சந்தித்து திருமண அழைப்பிதழைக் கொடுத்து திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதைத் தொடர்ந்து மற்ற தலைவர்களுக்கும் அவர் அழைப்பு விடுக்கவுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக