செவ்வாய், 26 அக்டோபர், 2010

கனடிய தேர்தலும் ஈழத்தமிழரும்... மக்கள் ஆணையை பொறுத்திருந்து பார்ப்போம

! 
 எமது தாய்நாட்டில் பல தேர்தல்கள்... தேர்தல்வன்முறைகள்... கள்ளவாக்குகள்... என்று பல வழிகளிலும் பரிச்சயமான முறையில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழரில் பெரும்பான்மையோர் வாழும  கனடாவின் மிக முக்கியமான மாகாணமாகத் திகழும் ஒன்ராறியோவின் தநைகரான ரொறன்றோ நகரின் மாநகர சபைக்கு, ஒக்ரோபர் 25 இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
இதிலே தமிழர்களைப் பொறுத்தவரை, இத்தேர்தலில் 42வத  வட்டாரமே அதிகம் கவனத்தை ஈர்த்ததாக இருக்கின்றது. அதற்குக் காரணம், இவ்வட்டாரத்தில் தான், கனடிய புலித்தமிழர்களுக்கு நன்கு அறிமுகமான நீதன் சண் (Neethan Shan) என்பவரும், மாற்று தமிழர்கள் என்பவர்கட்க  ஓரளவ அறிமுகமான நமு பொன்னம்பலம் (Namu Ponnampalam)  என்பவரும் நேருக்கு நேர் மோதுகின்றனர். இதில் நீதன் சண் என்பவருக்கு புலிகளின் பினாமி அமைப்புகளும்... பினாமி ஊடகங்களும்... இளையோர் புலிவால்களும்... போட்டிபோட்டு உதவி வரும் நிலையில்,  பி டி பி சார்ந்த நமு பொன்னம்பலம் என்பவருக்கு இலங்கை அரச  சார்பானவர்களும் அவருக்கு வேண்டியவர்களும் உதவி செய்து பிரச்சாரம் செய்து வரும் நிலையில் போட்டி நிலவுகிறது. ஆனால் பண பலத்துடன் கூடிய துண்டு பிரசுர பிரசாரத்திலும் வீதியோர அறிமுக அட்டை (sign board) இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்களில்லாமல் போட்டி போட்டு பிரச்சாரம் செய்துள்ளதை காணக் கூடியதாக உள்ளது.  
இதிலே நீதன் சண்ணை எடுத்துக் கொண்டால் இளம் வயதில் கனடாவிற்கு அகதியாக குடி பெயர்ந்து தனது கல்வியை தொடர்ந்து 2006   ஆண்டு மார்க்கம் நகர 7ம் 8ம் வட்டார கல்விச் சபை வேட்பாளராக போட்டியிட்டு பல்லின கலாச்சார மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு (school trustee) தற்போது அரசியலில் அடுத்த கட்டமாக கவுன்சிலர் வேட்பாளராக நிற்கிறார். தற்போது தாயகத்தில் புலித்தலைமை பூண்டோடு அழிந்து, புலம்பெயர் நாடுகளில் புலிகளின் அமைப்புகள் சின்னாபின்னமாகி, முக்கியமாக கனடாவில் நாடு கடந்து அரசமைக்க புறப்பட்டவர்க்கள் தம்மைத் தாமே துரோகிகளாக்கும் நிலையில் இவர்கள் எதிர்பார்க்கும் புலித்தமிலர்கள  எத்தனை பேர் வாக்களிப்பார்கள் என்று தெரியாது.
நமு பொன்னம்பலத்தை எடுத்துக் கொண்டால  இவரும்  கனடாவிற்கு குடி பெயர்ந்து வந்தவரே. தற்போது புலித் தலைமை அழிந்துள்ள நிலையில் தனது நெடு நாள் அவாவான தகப்பனார் வந்த பரம்பரை அரசியல் பாதையை தொடர முக்கியமாக ஈழத்தமிழரின் வாக்குகளை நம்பி களத்தில் இறங்கியுள்ளார் என தெரியக்கூடியதாக உள்ளது. அத்துடன் இவர் ஓர் யாழ்ப்பான மேல்த்தட்டு வர்க்க சிந்தனை உள்ளவர் ஆதலால் (இலங்கையின் வட பகுதியிலுள்ள அளவெட்டிக் கிராமத்தைச் சேர்ந்த பிரபலமான கல்வி மற்றும் அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவராவார். அவரது தகப்பனார் வி.பொன்னம்பலம், சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் ஒரு புகழ்மிக்க ஆசிரியராக இருந்ததுடன், பின்னர் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின் அதிபராகவும் இருந்தவர். -http://www.thenee.com/html/251010-2.html ) இவரைபோல் யாழ்ப்பான மேல்த்தட்டு வர்க்க சிந்தனை உள்ளவர்கள், அரச சார்பானவர்கள், புலியை ஏற்காதவர்கள் வாக்களிக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது.
அடுத்தகட்டமாக ரொறன்றோ நகரின் மாநகர சபைக்கு உட்பட்ட கல்விச்சபையில் (school trustee)  ஈழத்தமிழர் பெருன்பான்மையாக வாழும் 21 ம் வட்டாரத்தில் இரு தமிழர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் நாதன் கதிர்காமநாதன் என்பவர் தமிழர்கள் மத்தியில் அல்லாமல் பல்லின கலாச்சார மக்கள் மத்தியிலும் நன்கு அறிமுகமானவர். மற்றையவர் கனடாப் புலிகளின் இளையோர் வட்டத்தில் மிகவும் பிரபல்யமானவர் என்பதுடன் அவரைப் பற்றி சிறப்பாக சொல்வதற்கு ஒன்றும் அறியக்கூடியதாக இல்லை.
ரொறன்றோ கல்விச்சபைக்கு போட்டியிடும்  நாதன் கதிர்காமநாதன்  என்பவரை எடுத்துக் கொண்டால் வருடந்தோறும் காலம்தவராமல் தமிழர் விடுதலைக் கூட்டணியின்  தானைத் தளபதி என அழைக்கப்பட்ட அமரர் அமிர்தலிங்கத்தின் சிரார்த்த தினத்தை நினைவு படுத்தி ரிச்மன்ட்ஹில்  ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடு வைப்பதுடன் இவர் ஓர் தமிழ்ப் பற்றாளர் மட்டுமல்லாமல், சூழல் பாதுகாப்பு... மனித நேயம்... உள்ளவராக  கடந்த ஒன்பது வருடங்களாக தான் வசிக்கும் பகுதியில் உள்ள பாடசாலை சங்கத்தில் பணியாற்றி வருவதுடன் கடந்த ஐந்து வருடங்களாக சங்கத்தின் இணைத்தலைவராகவும் பணியாற்றி வருகிறார். அத்துடன் இளையோர் கல்வியில் தீவிர அக்கறை கொண்டவராகிய இவர் பல மாணவர் சார்ந்த செயல் திட்டங்களை முன்னிலைப் படுத்தி குழந்தைகளுக்கா  ுழுநேரக் கல்வித்திட்டம் வெற்றி பெற என்றும் அயராது உழைப்பேன் என்பதுடன் இயற்கையை நேசிக்கும்... வாக்காளர் அட்டையில்  82 ம் இலக்கத்தில் போட்டியிடும் நாதன் "எமது மாபெரும் இயற்கைச் செல்வம் எமது குழந்தைகளின் உளப்பாங்காகும்" என்கிறார்.
நாமும் புலம்பெயர் மண்ணில் இன்று பல்லின கலாச்சார மக்கள் மத்தியில் போட்டியிடும் ஈழத்தமிழர்களில் பண பலமுள்  ுலி ஆதரவாளர்களா... ஈ பி டி பி சார்ந்த பண பலமுள்ள பரம்பரை அரசியலா... மக்கள் தொண்டனாக பல்கலாச்சார மக்கள் மத்தியில் உள்ளவரா... யார் வெல்கிறார்கள்... போட்டியில் வெல்லாவிட்டாலும்  எத்தனை வாக்குகள் எடுக்கிறார்கள் என்று மக்கள் ஆணையை பொறுத்திருந்து பார்ப்போம்! 
குறிப்பு: கனடாவில் மூன்று நிலைகளில் அரச அதிகாரம் செயற்பட்டு வருகிறது. ஒன்று தலைநகர் ஒட்டாவாவை மையமாகக் கொண்டு செயற்பட்டு வரும் மத்திய அரசாங்கமாகும். இரண்டாவது வகை, மாகாணங்களை மையப்படுத்தி நடைபெறுகின்ற மாகாண அரசுகளாகும். மூன்றாவது நிலையில் செயற்படுபவை மாநகர, நகர, கிராம மட்ட நிர்வாகங்களாகும். இவற்றில் கனடாவின் மிக முக்கியமான மாகாணமாகத் திகழும் ஒன்ராறியோவின் தநைகரான ரொறன்றோ நகரின் மாநகர சபைக்குத்தான் ஒக்ரோபர் 25 இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
- அலெக்ஸ் இரவி

கருத்துகள் இல்லை: