ஞாயிறு, 23 மே, 2010
நாட்டிலிருந்து வெளியேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் NGO தலைவர்களை
இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் தகவல்களை வெளியிடும் சர்வதேச அரச சார்ப்பற்ற நிறுவனங்களில் தலைவர்களை நாட்டிலிருந்து வெளியேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வடபகுதியில் முகாம்களில் தங்கியுள்ள இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உணவு வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், குடிநீர் வழங்குவது குறைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் வதிவிடப் பிரதிநிதி அறிக்கையொன்றை அனுப்பியிருந்ததாகவும் இதனையடுத்தே அரசாங்கம் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வதிவிடப்பிரதிநிதி நோர்வே அரசுக்குரிய நிறுவனமொன்றில் பணியாற்றி வருகிறார். இவ்வாறான அமைப்புகள் இலங்கைக்குள் வருவதையும் அரசாங்கம் தடைசெய்துள்ளது. கடந்தகாலங்களில் இலங்கையில் பணியாற்றிய சர்வதேச தொண்டு நிறுவனங்களில் செயற்பாட்டாளர்களுக்கு இலங்கை அரசாங்கம், நாட்டில் தங்கியிருக்க வீசா அனுமதியை நீடிக்காதநிலையில் பலர் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக