கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த செல்வந்தரான வர்த்தக ஒருவரை கடத்திச் சென்று அவரை சித்திரவதை செய்து அவரது குடும்பத்தினரிடம் 75 லட்சம் ரூபாவை கப்பமாக கோரிய திட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவொன்றின் முக்கிய நபர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட வர்த்தகரின் குடும்பத்தினரிடம் நேற்று அதிகாலை கப்ப பணத்தை பெற்றுக்கொள்ள தயாரா இருந்த போது, கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன் தெமட்டகொட காவற்துறையின் அதிகாரிகளும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரும் இணைந்து மேற்கொண்டு தேடுதல் நடவடிக்கையில் கடத்தப்பட்ட வர்த்தகரும் மீட்கப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட வர்த்தகர் சில தங்க நகை கடைகளின் உரிமையாளராவார். இவர் நேற்று முன்தினம் தெமட்டகொட சந்திக்கு சென்றிருந்த போது வெள்ளை வேனில் சென்ற ஆயுததாரிகள் அவரை கடத்திச் சென்றுள்ளனர். கடத்திச் சென்ற ஆயுததாரிகள் வர்த்தகரின் வீட்டுக்கு தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு, வர்த்தகரை விடுவிக்க 75 லட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளனர். அத்துடன் வர்த்தகர் தாக்கப்படும் சத்தமும் தொலைபேசியில் கேட்டுள்ளது. இதனால் குடும்பத்தினர் அச்சமடைந்து கப்ப பணத்தை வழங்க முன்வந்துள்ளனர். அதேவேளை இது குறித்து வர்த்தகரின் உறவினர்கள் காவற்துறையில் முறையிட்டுள்ளனர்.
தெமட்டகொட காவற்துறையினர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் கப்பம் கோரி நபர்களின் முக்கிய உறுப்பினர் ரூவான்வெல்ல பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டார். வேன் ஒன்றில் அங்கு சென்றிருந்த கடத்தப்பட்ட வர்த்தகரின் உறவினர்களிடம் கப்ப பணத்தை பெற தயாரான நிலையில் அங்கு மறைந்திருந்த காவற்துறையினர் அவரை கைதுசெய்ய முயற்சித்த போது சந்தேக நபர் வர்த்தகரை கைவிட்டு, தான் சென்ற வேனில் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார். வேனை கைப்பற்றிய காவற்துறையினர் சந்தேக நபரையும் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபர் நிட்டம்புவ திஹாரிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்கள் கொழும்பு புதுக்கடை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக