ஞாயிறு, 23 மே, 2010

முறுகல்நிலை. வவுனியா நகரசபைத் தலைவருக்கும் சபை உறுப்பினர்களுக்குமிடையில்

வவுனியா நகரசபைத் தலைவருக்கும் சபை உறுப்பினர்களுக்குமிடையில் முறுகல்நிலை தோன்றியுள்ளது சபையின் மாதாந்த கூட்டம் புதன்கிழமை தலைவரின் முன்னிலையில் நடைபெற்றபோது ஆளும்கட்சி, மற்றும் எதிரணி சபை உறுப்பினர்கள் தலைவரினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிகளை தோல்வியடைய செய்துள்ளனர். இந்நிலையில் நகரசபையின் செயல்பாடுகள் சில தாமதமடையக்கூடிய நிலை தோன்றியுள்ளது சென்ற கூட்டறிக்கை, கணக்கறிக்கையும் அங்கீகரிக்கப்படவில்லை. கணக்கறிக்கையினை வடமாகாண ஆளுநரைக் கொண்டு அங்கீகரிக்கப் போவதாக நகரசபைத் தலைவர் கூறியுள்ளார். இதுவரை காலமும் சபையின் நிதியினை தலைவர் மாதம் 1லட்சம் வரை பாவிக்க அனுதிக்கப்பட்டது அது இப்போது 10ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழரசு கட்சி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வவுனியா நகரசபை உறுப்பினர்களாக உள்ளனர்.

கருத்துகள் இல்லை: