இந்தியா முழுவதும் சுமார் 20 ஆயிரம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்காரணமாக இதுவரை ஏர் இந்தியாவின் 76 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நேற்று மட்டுமே 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் உள்பட முக்கிய நகரங்களில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய விமான போக்குவரத்து மந்திரி பிரபுல் படேல், ஊழியர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினார். அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதையடுத்து ஸ்டிரைக்கில் ஈடுபட்ட 18 ஊழியர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனாலும் அரசின் எச்சரிக்கையையும் மீறி விமான ஊழியர்கள் தொடர்ந்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் இன்றும் விமானங்களை ரத்து செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இன்று இந்தியா முழுவதும் 76 விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
டெல்லியில் 24, மும்பையில் 37, கொல்கத்தாவில் 6, பெங்களூரில் 2 விமானங்கள் ரத்தாகி உள்ளன. சென்னையில் இருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர், மும்பை, கோவை, புவனேசுவர், பெங்களூர், திருவனந்தபுரம், கொச்சி நகரங்களுக்கு செல்லும் 7 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
மேலும் பல விமானங்களை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் இந்தப் போராட்டம் சட்ட விரோதமானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் இன்று மாலை அறிவித்துள்ளது. இதையடுத்து வேலை நிறுத்தம் இரவில் முடிவுக்கு வந்துள்ளது. ஆனாலும் பாதிக்கப்பட்ட சேவைகள் சீராக பல நாட்களாகும் என்று தெரிகிறது.
பதிவு செய்தது: 27 May 2010 12:30 am
நான் திரும்பவும் சொல்லுகின்றேன் எந்த அணியை தொட்டால் அரசுக்கு பிரட்சனை வருமோ அந்த அணி நினைத்ததை சாதித்துக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. aa lali
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக