முன்னாள் சிறுவர் போராளிகள் வைக்கப்பட்டிருந்த புனர்வாழ்வு முகாமொன்றை இலங்கை நேற்று செவ்வாய்க்கிழமை மூடியுள்ளது. ஆனால், 52 பேர் அரசாங்கத்தின் பராமரிப்பில் அவர்களின் கல்வி பூர்த்தியடையும் வரை தொடர்ந்தும் வைக்கப்பட்டிருப்பார்கள் என்று அதிகாரியொருவர் தெரிவித்தார்.
யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து 500 சிறுவர் போராளிகள் படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் அநேகமானோர் தமது குடும்பங்களுடன் சேர்ந்துள்ளனர். 198 ஆண்களும் பெண்களும் கொழும்பில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அந்தப் புனர்வாழ்வு நிலையம் நேற்று செவ்வாய்க்கிழமை மூடப்பட்டிருப்பதாக புனர்வாழ்வுக்கான ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுகந்த ரணசிங்க ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். இந்தப் பிள்ளைகள் அவர்களுடைய பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என்ற ரணசிங்க கூறினார்.
இந்த முகாமை மூடிவிடுமாறு இலங்கை நீதிமன்றம் கடந்த பெப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது. "முகாமில் நான் இருந்த வேளை எனக்கு நண்பர்கள் கிடைத்தார்கள். நான் கற்றுக்கொண்டேன். சிங்கள மக்களை நம்ப முடியும் என்று 17 வயதுடைய லக்ஷியா என்ற பெண் கூறினார். இவர் புலிகளின் பெண்கள் படையணியில் 3 வருடங்கள் இருந்தவர்.
எனக்கு போவது துக்கமாக உள்ளது. ஆனால், எனது குடும்பத்திடம் திரும்பிச் செல்வதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் என்று அவர் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். கொழும்பில் புறநகர் பகுதியான இரத்மலானையிலுள்ள இந்துக் கல்லூரியில் 49 பையன்களும் பெண்களும் தமது கல்வியைத் தொடரவிருப்பதாக ரணசிங்க கூறினார்.
இந்தப் புனர்வாழ்வு முகாம் வாழ்க்கையானது சட்டத்தரணியாகவரும் தனது கனவுகளுக்கு அண்மித்ததாகக் தன்னைக் கொண்டு சென்றுள்ளதாக 16 வயதுடைய கிறஸ்டி கூறினார்.பாடசாலைக் கல்வியை நிறைவுசெய்ய விரும்பியிருந்தேன். புலிகள் இப்போது முடிந்துவிட்டனர். ஆட்கள் வந்து என்னை சண்டையிடுவதற்கு திரும்ப அழைத்துச் செல்லமாட்டார்கள் என்று கிறிஸ்டி தெரிவித்தார்.

200 சிறார்கள் பெற்றோர்களிடம் வவுனியா நீதிமன்றத்தால் ஒப்படைப்பு
விடுதலைப் புலிகளில் அங்கம் வகித்துள்ளதாக தடுப்பு முகாம்களில் வைத்து பராமரிக்கப்பட்டு பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 200 சிறுவர்கள் நேற்று வவுனியா நீதிமன்றினால் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பல மாவட்டங்களையும்சேர்ந்த இச் சிறுவர்கள் இராணுவப் பாதுகாப்புடன் ஐக்கிய நாடுகளுக்கான சிறுவர் நிதியப் பிரதிநிதிகளின் வழித்துணையுடன் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.
நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் சிறுவர் நன்னடத்தைபிரிவு அதிகாரிகளின் ஊடாக அங்கு வந்திருந்த பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
கொழும்பு இந்துக்கல்லூரியில் இவர்களுக்கான புனர்வாழ்வளிக்கப்பட்டதாகவும் இவர்கள் புனர்வாழ்வின் போது திருப்திகரமாகச் செயற்பட்டதனாலும் போதுமான புனர்வாழ்வை பெற்றமையினாலும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக