செவ்வாய், 25 மே, 2010

1981 ஆம் ஆண்டு வடக்கின் யாழ்ப்பாணத்தில் 21 ஆயிரம் சிங்கள மக்கள் வாழ்ந்துள்ளனர்

வடக்கின் யாழ்ப்பாணத்தில் முன்னர் சிங்கள மக்கள் வாழ்ந்த நிலையில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.        தற்போது நாட்டில்     அமைதி நிலைமை நிலவுவதையடுத்து    யாழ்ப்பாணத்தில் முன்னர் வாழ்ந்த சிங்கள மக்கள் மீண்டும் அங்கு குடியேற்றப்படவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளரும் மின்சக்தி  அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அதாவது வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த தமிழ்,   முஸ்லிம்,         சிங்கள மக்கள் என அனைவரும் மீண்டும் அங்கு    மீளக்குடியமர்த்தப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.      மீள்குடியேற்ற செயற்பாடுகள் தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேற்கண்ட வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது, வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் மீள்குடியேற்றப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அதனை அரசாங்கம் செய்துவருகின்றது.
ஆனால் இங்கு குறிப்பிடப்படவேண்டிய முக்கிய விடயம் என்னவெனில் 1981 ஆம் ஆண்டு வடக்கின் யாழ்ப்பாணத்தில் 21 ஆயிரம் சிங்கள மக்கள் வாழ்ந்துள்ளனர்.    அவர்கள் அக்காலப்பகுதியில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.                  தற்போது அந்த மக்களின் எண்ணிக்கை 40 ஆயிரமாக அதிகரித்திருக்கலாம். எனவே அவர்கள் அனைவரும் அங்கு மீண்டும் குடியேற்றப்படவேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
அதாவது தேவேந்திர முனையிலிருந்து பருத்தித்துறை வரை அனைத்து பிரதேசங்களிலும் அனைத்து மக்களும் வாழக்கூடிய சூழல் வேண்டும். அதனை எமது அரசாங்கம் உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் முன்னர் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து மக்களும் மீள்குடியேற்றப்படவேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

கருத்துகள் இல்லை: