ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

போயஸ் கார்டன் வேதா நிலையம் யாருக்கு சொந்தம்? நினைவு இல்லமாக்க முடியுமா? உயில் என்ன கூறுகிறது?

சென்னை, போயஸ் கார்டன் பகுதியில் உள்ள, 'வேதா இல்லத்தில்' ஜெயலலிதா வசித்து வந் தார். அவர் வசித்து வந்த இல்லத்தில், தற்போது சசிகலா, தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அதை விரும்பாத, அ.தி.மு.க., தொண்டர்கள் மற்றும் பொது மக்கள், 'ஜெ., வசித்த வீட்டை, அவரது நினைவு இல்லமாக மாற்ற வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர். அதை ஏற்ற, முதல்வர் பன்னீர்செல்வம், 'ஜெயல லிதா வசித்த, வேதா இல்லம், நினைவு இல்லமாக மாற்றப்படும். அவர் பயன்படுத்திய, கார், நுாலகம் என, அனைத்தும் காட்சிப் பொருளாக் கப்படும்' என, அறிவித்தார்.  வேதா நிலையத்தை விவேக் , இளவரசியின் மகன் பேருக்கு மாற்றி உள்ளார்களாம். அதே போல் கொடநாடு எஸ்டேட் தினகானுக்கு மாற்றி உள்ளார்களாம். இது போல் ஜெயாவின் எல்லா சொத்துக்களும் மாற்றப்பட்டு உள்ளது. இது எப்போ நடந்தது யாருக்கும் தெரியாது? ஓபிஎஸ்ஸு லேசு பட்டவர் இல்லை. வேத இல்லத்தை ம்யூஸியம் ஆக்க வேண்டும் என்று ஒரு குண்டை போட்டு சசிகலாவை கலக்கி விட்டார். சசிகலா வேதாநிலையத்தை ம்யூஸியம் ஆக்க முடியாது என்றால் அதிமுக தொண்டர்கள் என்னசெய்வார்கள்? காலில் விழுவர்களா இல்லை வீரம் கொண்டு எழுவார்களா? பார்ப்போம்..
இதற்கு, கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்களி டம், பலத்த வரவேற்பு கிடைத்துள் ளது. முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து, ஜெயலலிதா வசித்த, வேதா இல்லம், அவர் பெயரில் உள்ளதா அல்லது வேறு யார் பெயருக்கும், உயில் எழுதி வைக்கப் பட்டு உள்ளதா என, அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஒருவர் வசித்த இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்றால், அவரின் வாரிசுதாரர் களிடம்,ஒப்புதல் பெற வேண்டும்.ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோருக்கு வாரிசு உரிமை கோர வாய்ப்பு உள்ளது.

வேறு யார் பெயருக்காவது, உயில் எழுதி வைத்திருந்தால், அவர்களும் உரிமை கோர வாய்ப்புள்ளது. உயில் உள்ளதா; ஜெ., அண்ணன் குடும்பத்தினர் உரிமை கோருகின்றனரா என்பதை அறிந்த பின்னரே, நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து, அரசு முடிவு செய்ய முடியும்.

கையெழுத்து இயக்கம் துவக்கம்!

சென்னை, போயஸ் கார்டனில், ஜெ., வசித்த வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி சார்பில், கையெழுத்து இயக்கம் துவக்கப் பட்டுள்ளது. முதல்வர் பன்னீர் செல்வம் வீட்டில், அவர் முதல் கையெழுத்திட்டு, அதை துவக்கி வைத்தார். - நமது நிருபர் -  தினமலர்

கருத்துகள் இல்லை: