ஞாயிறு, 7 நவம்பர், 2010

யாழ். மாநகர சபையின் புதிய பிரதி மேயராக முஸ்லிம் ஒருவர் நியமனம்!

.அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி எம்.ஆர்.எம். ரமீஸ் யாழ். மாநகர சபையின் பிரதி மேயராக நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த மாநகரசபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன போட்டியிட்டு இருந்தன.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த நான்கு வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றனர். எனவே பிரதி மேயர் பதவியை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரி இருந்தனர்.

இந்நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோருக்கு இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

இவ்வுடன்படிக்கையின்படி இம்மாதம் நவம்பர் 10 ஆம் திகதி முதல் இப்பிரதி மேயர் பதவியை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் யாழ். மாநகரசபை உறுப்பினர் ஒருவருக்கு வழங்குவார் என்கிற இணக்கப்பாட்டுக்கு அமைச்சர் டக்ளஸ் வந்திருந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் 08 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் பகிரங்க கூட்டம் ஒன்றில் வைத்து இவ்வுடன்படிக்கையை அமைச்சர் தேவானந்தாவுக்கு நினைவூட்டினார்

இந்நிலையில் இது வரை காலமும் பிரதி மேயராக இருந்து வந்த இளங்கோ றீகன் இப்பதவியை சட்டத்தரணி ரமீஸ{க்கு விட்டுக் கொடுத்துள்ளார்..

கருத்துகள் இல்லை: