Hemavandhana - Oneindia Tamil : சென்னை: ஒரு முக்கியமான விஷயம் ஓடிக் கொண்டிருக்கிறது.. முதல்வர் ஸ்டாலினின் மருமகனும் பிரசாந்த் கிஷோரும் அடிக்கடி பேசி வருகின்றனராம்..
இது சூப்பர் பதவிக்கான மூவ் என்கிறது டெல்லி வட்டாரங்கள்..!
நான் கிளம்பறேன் என்று சொல்லிவிட்டு போன பிரசாந்த கிஷோர் 2 மாசத்தில் மறுபடியும் அரசியலுக்கு ரீ-என்ட்ரி தந்துவிட்டார்..!
சூட்டோடு சூடாக சரத்பவாரையும் சென்று சந்தித்தார்.. ஒருவேளை 3வது அணி வரப்போகிறதோ என்ற டவுட் இருந்தது..
ஆனால், பாஜக-வுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத 3வது அணி இல்லை என்று தெளிவுபடுத்தி விட்டார்
எம்பி தேர்தல் ஆனால், 2024-ல் நடைபெறவிருக்கும் எம்பி தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக-வை மத்தியில் ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கான வலுவான கூட்டணியை பிகே களம் அமைக்க தயாராகிவிட்டார் என்றே கூறப்பட்டு வருகிறது..
மேலும் உபி உட்பட பல்வேறு மாநிலங்களில் விரைவில் தேர்தல் வரப்போகிறது.. இந்த முறை உபியில் ஜெயித்தே ஆக வேண்டும் என்று காங்கிரஸ் கங்கணம் கட்டி இறங்கி உள்ளது.. அதேபோல பஞ்சாப்பையும் காங்கிரஸ் விடுவதாக இல்லை.
சந்திப்புகள் இப்படிப்பட்ட சூழலில்தான் பிரசாந்த் கிஷோரின் வருகையும், சந்திப்புகளும் முக்கிய இடத்தை பெற்று வருகின்றன. இதெல்லாம் அடுத்தடுத்து மாநிலங்களில் நடக்க போகும் தேர்தலுக்கான முன்னெடுப்புகள் என்றாலும், பிரதமர் வேட்பாளர் என்ற விஷயமும் சேர்ந்தே கிளம்பி உள்ளது.. காங்கிரஸாகட்டும், மேற்கு வங்கமாகட்டும், தமிழகமாகட்டும் இந்த தலைமைகள் எல்லாருக்குமே பிரசாந்த் கிஷோர் வியூகம் அமைத்து தந்தவர்.. இனியும் தருபவர்.
அந்த வகையில், ஒருவேளை ராகுல்காந்தியை பிரதமராக்க பிகே பிளான் செய்திருப்பதாக தெரிகிறது.. மற்றொருபக்கம், பாஜகவுக்கே ஒற்றை நபராக தண்ணி காட்டி கொண்டிருக்கும் மம்தா பானர்ஜியும், இன்னொரு பக்கம் இளைஞர்களின் ஆதரவை பெற்ற ஜெகன் மோகன் ரெட்டியும் பிரதமர் வேட்பாளர் கனவில் இருப்பவர்கள்தான்.
இப்படிப்பட்ட சூழலில்தான் ஸ்டாலினின் பெயரும் அடிபடுகிறது.. இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என்ற கேட்டகிரியில் ஸ்டாலினின் தற்போதைய செயல்பாடுகள் அமைந்து வருகின்றன.. எனவே, ஸ்டாலினையும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பிரசாந்த் கிஷோர் பிளான் செய்கிறாராம்.. அதாவது ஒன்று ராகுல் காந்தி அல்லது ஸ்டாலின் என்று கணக்கு போட்டு வருகிறாராம்..
இதனை மற்ற கட்சித் தலைவர்களிடம் அவர் பேசி வருவதாகவும் சொல்லப்படுகிறது.. ஒருவேளை ராகுல் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், ஸ்டாலினுக்கும் ஒரு முக்கியமான அதாவது தேசிய அளவிலான பதவி கிடைக்கும் என்கிறார்கள். இதற்காகவே ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் பிரசாந்த் கிஷோரும் அடிக்கடி பேசி வருவதாக ஒரு தகவல் கசிந்து வருகிறது.. இவர்கள் இருவரும் ஏற்கனவே நண்பர்கள்தான்.. பிகேவை ஸ்டாலினுக்கு அறிமுகப்படுத்தியதே சபரீசன்தான்..
அந்த வகையில் இவர்கள் நட்பின் அடிப்படையில் சந்தித்தாலும், பிகே 2வது இன்னிங்ஸ் தொடங்கி உள்ளதால், சபரீசனின் சந்திப்பை இயல்பாக கடந்து விட முடியாது. அநேகமாக எதிர்க்கட்சி கூட்டணிக்கு தென் மாநிலத்திலிருந்து ஒரு முக்கிய பதவி கொடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தலும் எழுந்துள்ள நிலையில், ஸ்டாலின் தான் அதற்கு தகுதியானவர் என்று பிகே படுஸ்ட்டிராங்காக நினைக்கிறாராம்.
பாஜகவுக்கு எதிராக பிரம்மாண்டமான கூட்டணி ஒரு பக்கம் ரெடியாகிறது என்றால், தேசிய அளவிலான ஒரு பதவி ஸ்டாலினுக்கு கிடைக்க போவதாக தகவல்கள் வருவது அரசியல் அனலை கூட்டி வருகிறது.. முக்கிய பதவி ஸ்டாலினுக்கு கிடைக்குமா? மோடிக்கு மாற்றாக, முக ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? தெரியவில்லை.. பார்ப்போம்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக