வெள்ளி, 23 ஜூலை, 2021

ராகுல் காந்தி : ஒட்டு கேட்பு விவகாரத்திற்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும்!

 தினத்தந்தி :ரபேல் தொடர்பான விசாரணையை தடுக்கவே பெகாசஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,    பெகாசஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இவ்விவகாரம் பாராளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:-
ரபேல் தொடர்பான விசாரணையை தடுக்கவே பெகாசஸ் பயன்படுத்தப்பட்டது.  


பிரதமரே நேரடியாக பொறுப்பேற்க வேண்டும். அனைத்து தரப்பினரையும் உளவு பார்க்க பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.  
ஒட்டுகேட்பு விவகாரத்திற்கு பொறுப்பேற்று  உள்துறை அமித்ஷா பதவி விலக வேண்டும்.எனது செல்போனையும் பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுகேட்டுள்ளனர்.
பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட வேண்டிய ஆயுதமாகவே பெகாசஸ் மென்பொருளை இஸ்ரேல் வகைப்படுத்தியுள்ளது. ஆனால், பிரதமரும் உள்துறை அமைச்சரும் நமது அமைப்புகளுக்கு எதிராக பயன்படுத்தியுள்ளனர்” என்றார்

கருத்துகள் இல்லை: