சனி, 24 ஜூலை, 2021

வட மாநிலங்களில் எந்தவித கட்டமைப்பும் உருவாக்காத பாஜக திராவிடத்தால் வீழ்ந்தோம் என பரபரப்புரை செய்கிறது,

சக்தி ராஜேஸ்வரி  : நேற்று இரவு 11  மணியளவில் நான்  எழிலன் வே  மற்றும் பிரதீப் மூவரும் டீ குடிப்பதற்காக பைபாஸில் இருக்கும் ஒரு டீ கடைக்கு சென்றோம்.
வெளியே ஒரு  ஆறு  பேர் கழுத்தில் காவி துண்டுடன் உட்கார்ந்து கொண்டிருந்தனர். எல்லாம் வட இந்திய முகம்.
வயதும் எல்லாம் முப்பதற்குள். ஸ்டேட் விட்டு ஸ்டேட்  வந்து இப்படி இருக்காங்களே.  தமிழ்நாட்டில் இப்படி இருப்பார்களா என யோசித்து அவர்களை புகைப்படம் ஒன்று எடுத்துக் கொண்டேன்.
சரி வா எழிலா எதாவது பேசுவோம். என பார்க்கும்போதுதான் பைக்கும் அதில் பிளாஸ்டிக் chairs ம் இருந்தது. அப்போதுதான் புரிந்துது அவர்கள் சேர் விற்க வந்தவர்கள் என்று. ..
"பையா எந்த ஸ்டேட்ல இருந்து வரீங்கனு" கேட்டேன்.
"ராஜஸ்தான்" என்றார்கள்.
"ஒரு சேர் வித்தா எவ்வளவு profit" எனக் கேட்டேன்... அவர்களுக்கு புரியவில்லை..
"கித்தனா கித்தனா பையா சேர் வித்தா" .. என்றேன்


"700" என்றார்கள். நான் கேட்டது ஒரு சேருக்கு இலாபம் எவ்வளவு என அவர்கள் சொல்லியது ஒரு ஜோடி சேரின் விலை...
"Bike rent எவ்வளவு" எனக் கேட்டேன்.
"இது TN த்ரட்டி (30)" என்றார்கள். அதாவது அந்த பைக்குகளை சேலத்திலிருந்து விலைக்கு  வாங்கி வந்துள்ளார்கள் எனப் புரிந்தது.
நானும் எழிலனும் அவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது இன்னொருவர் வந்தார். அவர்தான் இவர்களுக்கு எல்லாம் சீனியர் போல.
அவர் வந்தப் பிறகு அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். அவருக்கு ஓரிரு வார்த்தைகள் தமிழ் தெரிந்தது அதை வைத்து பேசினோம்.
அவர்கள் கரூரில் ஒரு பேக்டரியிலிருந்து வோல்சேல்லில் சேர்களை வாங்கி ஒரு ஊரில் இறக்கி வைத்து  வியாபாரம் செய்துவிட்டு இன்னொரு ஊருக்கு செல்வார்களாம்..
"ஒரு நாளைக்கு எவ்வளவு profit கிடைக்கும்" என்றேன். "700, 500, 200 இதுல பைக் பெட்ரோல், நாஷ்டா, ரூம் வாடகை எல்லாம் கொடுக்கனும் " என்றார்..
"இதற்காக ராஜஸ்தானிலிருந்து வர வேண்டுமா அங்க எல்லாம் job இல்லையா" என்றோம்.
"நை சார் no job" என்றார்.
அப்படி பேசிட்டு இருக்கும் போதே உட்கார்ந்திருந்த ஒருவர் எழுந்து நடந்து வந்தார்....
அவர் ஒரு கால் ஊனமுற்ற மாற்றுத் திறனாளி. கம்பு ஊன்றி நடந்தார் அவரைப் பார்த்தவுடன்  எங்கள் இருவருக்கும் மனசு கஷ்டமாயிடுச்சு.
"ஏன் அவரை எல்லாம் கூட்டிட்டு இவ்வளவு தூரம்" என்றோம்.
"வயித்தை காண்பித்து இருக்கு இல்லை" சார் என சொல்லும் போது என்ன சொல்வதென்று தெரியாமல்  ஒரு கனம் அமைதியாக இருந்தோம்.
"எல்லாத்துக்கும் மேரேஜ் ஆகிடுச்சானு" கேட்டோம். இரண்டு பேரைக் காண்பித்து "அவர்களைத் தவிர மத்தவங்களுக்கு ஆகிடுச்சு" னார்..
" சார் நான் தோடா தோடா தமிழ் மாலும் அதுப்போல நீங்களும் தோடா தோடா இந்தி மாலும் சார்" என்றார்..
"நீங்கதான் வியாபாரம் பண்ண தமிழ்நாட்டுக்கு வந்திருக்கீங்க. அதனால உங்களுக்கு தமிழ் தேவை. நாங்கள் ராஜஸ்தான் வந்தால் இந்தி கத்துக்கிறோம்" என்றோம்.
ஆப்கி மோடி சர்க்கார் என்றவுடன். அவர் முகம் மலர்ந்தது. மொபைலிலிருந்து மோடியுடன் நான்கைந்து பேர் இருக்கும் ஒரு போட்டோவை காட்டி அதில் ஒருவரை  ப்ரண்ட் எனச் சொன்னார்..
ப்ரதீப்" we are opposite to modi" என்றான்.
"டே கம்முனு கட அத எல்லாம் சொல்ல வேண்டாம்" என்றேன்.
அவர்களுக்கு இரவு தங்கவும் நாளை காலை வரும் பிளாஸ்டிக் சேர் லோடை இறக்கி வைக்கவும் இடம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள்..
அனைவருக்கும் டீ வந்தது. டீ குடித்தார்கள்.. "நாங்க பே பண்றோம்" என சொன்னோம்..
" வேணாம் "என்றார்கள்.
" இல்லை இல்லை நாங்க பண்றோம்னு" சொல்லிட்டு, அனைவருக்கும் ஒரு பாக்கெட் பிஸ்கட் வாங்கிக் கொடுத்து சாப்பிட சொன்னோம்.
எல்லோரும் சாப்பிட்டார்கள்...சாப்பிட்டு முடித்தப் பிறகு ஒரு இளைஞர் திடீரென எழிலன் காலை தொட்டு கும்பிட்டான்..
"ஹே ஹே இது எல்லாம் தப்பு என சொல்லி அந்த இளைஞரை தூக்கி"நிறுத்தினான்.
"எல்லாம் சாப்டீங்களா, ஹோட்டல் இருக்கு சாப்டீறீங்களா" என்றேன்..
"நாஸ்டா ஆகிடுச்சு சார். நைட் தூங்க மட்டும் ஒரு இடம் வேண்டும்" என்றார்...
அந்த டீ கடை  வாடகைகடை என்பதால் அந்த கடைக்காரர், "அங்க பக்கம் உள்ள கோவில்ல படுத்துட்டு நாளைக்கு பக்கத்துல ஒரு குடோன் இருக்கு அது பேசி வாடகைக்கு எடுத்து சொல்லி இருக்கேன் சார்" என்றார்.
அதாவது ஒரு கடையின் முன் படுக்க கூட அவர்களுக்கு வாய்ப்பில்லை....
அவர் ஒவ்வொரு முறை போன் காட்டும் போதும் அவர் save பண்ணி வைத்திருக்கும் பெயர்கள் எல்லாம் இந்தியில் மட்டுமே இருந்தது. இதிலிருந்து அவர்கள் தொடக்ககல்வி கூட படிக்காதவர்கள், ஆங்கிலம் என்றால் என்னவென்றே தெரியாதது என்பது புரிந்தது.
பிளாட்பாரத்தில், கொசுக்கடியில் மனைவி பிள்ளைகளை விட்டு விட்டு மொழி தெரியாத ஊரில் வயித்துப் பொழப்புக்காக வியாபாரம்.. இதில் இலாபம் வருமா வராதா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை...
ராஜஸ்தானிலிருந்தும், பீகாரிலிருந்தும், உத்திரபிரதேசத்திலிருந்தும் இப்படி குரூப்பாக பிளாஸ்டிக் சேர் விற்கவும், சோம்பப்ளி, பஞ்சுமிட்டாய் விற்கவும் கூட்டம் கூட்டமாக இலட்சக்கணக்கில் வட இந்திய இளைஞர்கள்
கள் வருகிறார்கள் என்றால் உண்மையாக அங்கு என்ன மாதிரி சூழ்நிலை நிலவும் என்பதை ஒரு கணம் யோசித்து பாருங்கள்..
அப்படியே தமிழ்நாட்டை நினைத்து பாருங்கள்.. பள்ளி  கல்வி முழுவதும் இலவசம், சத்துணவு, ரேசனில் விலை இல்லா பொருட்கள், ஆடு மாடு இலவசம், மடிக் கணினி, மிக்ஸி கிரைண்டர், இலவச கலர் டிவி, பசுமை வீடுகள், 100 யூனிட் மின்சாரம் இலவசம், முதல் வகுப்பு பட்டதாரிகளுக்கு உதவித் தொகை, காப்பிடு திட்டம், ஊருக்கு ஊர் ஆரம்ப சுகாதார நிலையங்கள். ஒவ்வொரு தாலுக்கவுக்கும் மருத்துவமனைகள், மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் இன்னும் எத்தனை எத்தனையோ திட்டங்கள்...
இன்று படிக்காத ஆட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இங்கு உடல் உழைப்பு சார்ந்த தொழிலுக்கு  ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் உண்டு ஆனால் மற்ற மாநிலங்களில்?
சமூக வளர்ச்சியில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் வட இந்தியா எங்குள்ளது?
தங்களை நம்பும் மக்களுக்கு எந்தவித நலனும் செய்யாமல் இப்படி வைத்திருப்பதிலயே குறியாக உள்ளனர் ஆட்சியாளர்கள். இப்படி பட்டவர்கள் தேர்ந்தெடுத்து வருபவர்கள்தான் நம்மை ஆள்கிறார்கள்.
ஒரு டீ பிஸ்கட் வாங்கி கொடுத்ததற்காக விசுவாசமாய் காலில் விழுபவன், நம் கடவுளுக்காக ஒருவரை கொல்ல வேண்டும், மதத்திற்காக ஒருவரை கொல்ல வேண்டும் எனச் சொன்னால் கொல்ல மாட்டார்களா?
கண்டிப்பாக கொல்வார்கள். ஏனெனில் அவர்கள் அப்படித்தான் மோல்ட் செய்யப்பட்டுள்ளார்கள். இந்த மாதிரி இளைஞர்களை உருவாக்க வேண்டும் தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பதில் பாஜகவும் ஆர்எஸ்எஸ்ம் தெளிவாக உள்ளது.
 வளர்ச்சி அடைந்துள்ள நம்மை பார்த்து தான், எந்தவித கட்டமைப்பும் வட மாநிலங்களில் உருவாக்காத பாஜக திராவிடத்தால் வீழ்ந்தோம் என பரபரப்புரை செய்கிறது,
இதையே சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்களும் சொல்கிறார்கள்...
நீங்கள் மனசாட்சியுடன் யோசித்து பார்த்து
சொல்லுங்கள் திராவிடத்தால் வீழ்ந்தோமா? வாழ்ந்துக் கொண்டிருக்கிறோமா?
எழுதியவர் : சக்தி ராஜேஸ்வரி

கருத்துகள் இல்லை: