திங்கள், 19 ஜூலை, 2021

சபரீசனுக்கு நேரடி அரசியலில் ஆர்வம் இல்லை? முதல்வரிடமே தெரிவித்து விட்டார்?

மின்னம்பலம்:வெளிப்படையான அரசியலில் சபரீசன்?பிறந்தநாள் செய்தி!

Hemavandhana - e Oneindia Tamil :   சென்னை: திமுகவின் செல்வாக்கு கூடி கொண்டே வந்தாலும், மாப்பிள்ளையின் கொடிதான், கட்சிக்குள் உயர உயர பறந்து செல்கிறது என்கிறது மேலிட தொடர்புகள். திமுகவை பொறுத்தவரை சபரீசனின் முக்கியத்துவம் அதிகம்..
எப்போது தேர்தல் நடந்தாலும் சபரீசன்தான் பெரும்பாலும் கூட்டணிகளை பேசுவது, தலைவர்களுடன் சீட் விவகாரம் நடத்துவது என்று நிறைய பங்களிப்புகள் இருக்கும்
அதேபோல, ஒவ்வொரு தேர்தலின்போதும் ஸ்டாலினுக்கான தேர்தல் சுற்றுப்பயண விவரங்கள் முதல் மக்களை கவருவது வரை அனைத்தையும் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தருவதிலும் சபரீசனின் ரோல்தான் அதிகம் இருக்கும்.



சபரீசன் இப்போது விஷயம் என்னவென்றால், ஆட்சி பொறுப்பில் திமுக வந்ததில் இருந்து, சபரீசனுக்கு முக்கியத்துவம் கூடி கொண்டே போகிறதாம்..

ஜூலை 17-ந்தேதி சபரீசனின் பிறந்த நாள்... இதற்காக ஸ்டாலினிடம் வாழ்த்துகளை பெற்றார் சபரீசன்... அதேபோல, சபரீசனை தொடர்புகொண்டு அமைச்சர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

போட்டோ சிலர் நேரிலும் வாழ்த்து சொல்லியிருக்கிறார்கள். மேலும் திமுக அரசின் ஐஏஎஸ். மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பலரும் வாழ்த்தியுள்ளனர்... ஆனால், அமைச்சர்கள், ஐஏஎஸ். அதிகாரிகள் சந்திப்பின் ஃபோட்டோ ரிலீஸ் ஆகக் கூடாது என சபரீசன் ஸ்ட்ரிக்டாக உத்தரவு போட்டாராம்.. எனினும், திமுகவினர் பலரும் அவரை சந்தித்து வாழ்த்தியதை, பலரும் தங்களது மொபைல் ஃபோனில் வீடியோ, போட்டோவை எடுத்து கொண்டார்களாம்.

நிர்வாகிகள் இதனைதான் சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகிகள், அவரவர் வாட்ஸ் குரூப்பில் ஷேர் செய்து வருகிறார்கள்... இந்த சம்பவங்கள் திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. ஆட்சி நிர்வாகத்தை கவனிக்கும் பொறுப்பை சபரீக்கு ஸ்டாலின் கொடுத்திருப்பதாகவும், அதனால்தான் உயரதிகாரிகள் அவரது நட்பு வளையத்துக்குள் இருக்க நெருங்கி வருகிறார்கள் என்றும் இதற்கு காரணம் சொல்லப்படுகிறது.

அதிகார மையம் இதற்கிடையே, கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத சபரீ, ஒரு அதிகார மையமாக உருவாவது கட்சிக்குள் அதிருப்தியை உருவாக்கலாம், விமர்சனத்தையும் ஏற்படுத்தலாம் என்று சீனியர் அமைச்சர்கள் 2 பேர் ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார்களாம்... இதையடுத்து, சபரீசனை ராஜ்யசபா எம்.பி.யாக்கலாமா ? என்று ஆலோசிக்கிறாராம் ஸ்டாலின்.

எம்பி பதவியா? எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோதே, ராஜ்யசபா எம்பியாக்க சபரியிடம் விவாதித்தாராம் ஸ்டாலின்... அப்போது, நேரடி அரசியலில் எனக்கு ஆர்வம் இல்லை மாமா.. இப்படியே இருக்கிறேன் என்று சபரீயும் சொன்னாராம்.. இப்போதும் அதையேத்தான் சொல்லி வருகிறாராம்... ஆனாலும் இருப்பினும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் சபரீயை சம்மதிக்க வைத்து விட முடியும் என்றும் ஸ்டாலின் நினைப்பதாக திமுக தரப்பில் எதிரொலிக்கிறது.


கருத்துகள் இல்லை: