புதன், 21 ஜூலை, 2021

ராகுல் காந்தி : ஜி.கே.வாசன் வேண்டாம்.. வேற யார் வந்தாலும் ஓகே.. ஒரே போடு..

ராகுல் காந்தி போட்ட ரெட் கார்டு

Veerakumar  -  Oneindia Tamil :  சென்னை: ஜி.கே.வாசனுக்கு ராகுல் காந்தி போட்ட ரெட் கார்டு பற்றிதான் இப்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஜே.கே.வாசன் ஆழ்ந்து யோசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.அதிமுக கூட்டணியில் இருக்கிறது ஜி.கே.வாசனின், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி. ஆனால், கடந்த சட்டசபை தேர்தலில் படு தோல்வி அடைந்தது.
தமிழக அரசியலில் ஏற்கனவே மிக சோர்வாக இருந்த த.மா.கா.வின் இரண்டாம் நிலை தலைவர்களும் நிர்வாகிகளும் தேர்தல் தோல்வியால் மீண்டு துவண்டு போய்விட்டனர். இதனால் தங்களின் அரசியல் எதிர்காலம் கருதி திமுகவில் இணைந்து வருகின்றனர்
மத்திய அமைச்சராக இருந்த வாசன்   பொதுத் தேர்தலில் வாசன் போட்டியிட்டதாக வரலாறே இல்லை. மூன்று முறையும் ராஜ்யசபா மூலமாகவே எம்.பியாகி இரண்டு முறை மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார். வாசன் தனிப்பட்ட முறையில் தனது அரசியல் இருப்பை தக்க வைத்தாலும், அவரது கட்சியும், கட்சியைச் சேர்ந்தவர்களும் வளருவதற்கு பதில் தேய்ந்துதான் வருகின்றனர்.


இந்த நிலையில்தான், கட்சியின் வளர்ச்சிக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவிருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். இதன்படி, தமிழ்மாநில காங்கிரசின் தொண்டர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என்ற ஆசையில், மாவட்ட சுற்றுப் பயணம் சென்றார் ஜி.கே.வாசன்
குல்பி ராஜினாமா

சுற்றுப் பயணம் புறப்பட்ட உடனேயே, கோவையை சேர்ந்த தமாகா கொள்கை பரப்பு செயலாளர் குல்பி தங்கராஜ் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன், கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுத்து செயல்பட்டு வருகிறார். எனவே, கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். என்று குல்பி தங்கராஜ் ஒரு குண்டை வீசினார்.

கட்சியை கலைக்க கோரிக்கைகள் அதேநேரம், ஜி.கே.வாசன், சுற்றுப் பயணத்தை தொடர்ந்தார். மதுரை, திருச்சி மாவட்டங்களுக்கு சென்று வந்த அவர் மிகுந்த சோகவயப்பட்டிருக்கிறார். நிர்வாகிகளிடம் உற்சாகம் இல்லை என்பது ஒருபுறமிருக்க, பேசுகிற நிர்வாகிகள் எல்லோருமே மீண்டும் தாய் கட்சியில் இணைந்து விடலாம் தலைவரே... தனிக் கட்சி நடத்தி இனி ஒன்னும் ஆகப் போறதில்லே, ராகுல்காந்தியிடம் பேசுங்கள் தலைவரே என்று வற்புறுத்தியதைத்தான் அவரால் ஜீரணிக்க முடியவில்லையாம்.


வாசன்-பிணராப் முகர்ஜி இருந்தாலும் அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது என்பதால் அதனை மறுத்து அவரால் பேசமுடியவில்லையாம். மறைந்த முன்னாள் குடியரசு தலைவர், பிரணாப் முகர்ஜி இருந்த வரையில் வாசனுக்கு டெல்லி லாபி நன்றாக இருந்தது. அவரது மறைவுக்கு பிறகு டெல்லியில் லாபி இல்லாமல் கடினப்படுகிறார். மூப்பனார் காலம் தொட்டே அவர் மீதும் அவரது மகனான ஜி.கே.வாசன் மீதும் பிரனாப் முகர்ஜிக்கு நல்ல அபிப்ராயமும், நெருக்கமும் உண்டு.  (பழைய மூப்பனார் காலத்து கொடுக்கல் வாங்கல் கமிஷன் தொடர்புகள் உண்டு)

மோடி கொடுத்த ஆஃபர் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த பிரதமர் மோடி ரொம்பவே ஆசைப்பட்டார். எனவே ஜிகே வாசன் தனது கட்சியை கலைத்துவிட்டு, பாஜகவில் சேர்ந்தால் மத்திய அமைச்சர் பதவி அல்லது தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியை தரக் கூட ஆபர் வழங்கினாராம். ஆனால் கட்சியை கலைக்க வாசன் ரெடியாக இல்லை. எனவே, கட்சியை கலைக்காவிட்டாலும் மத்திய அமைச்சர் பதவி வாங்கத் தர முயன்றார் பிரணாப் முகர்ஜி என்று கூறினார். அந்த அளவுக்கு வாசன் மீது பிரணாப்புக்கு பரிவு உண்டு.

ராகுல் காந்தி போட்ட ரெட் கார்டு இப்போது பிரணாப் முகர்ஜி இல்லாத நிலையில், காங்கிரஸ் மேலிடத்தில் வாசனுக்கு லாபி இல்லாமல் போய் விட்டது. ஆனாலும், மூத்த தலைவர்களான முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஏ.கே. அந்தோணி, அம்பிகாசோனி ஆகியோரிடம் தனது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார் வாசன். அவர்களும் ராகுலின் கவனத்துக்கு இதனை கொண்டு சென்றார்களாம். "காங்கிரசிலிருந்து பிரிந்து சென்றவர்களில் வாசனை தவிர வேறு யார் வந்தாலும் சேர்த்துக்கொள்ளலாம்" என ஒரே போடாக போட்டுள்ளார் ராகுல் காந்தி. இதனையறிந்து ஏகத்துக்கும் நொந்து போயுள்ளார் வாசன்.

கருத்துகள் இல்லை: