வியாழன், 22 ஜூலை, 2021

மதுரை துணை ஆணையர் சண்முகத்தை பணி நீக்கம் செய்து உத்தரவு - தமிழக அரசு அதிரடி..

May be an image of text that says 'மதுரை மாநகராட்சி மா.நி 1/ 10697/2021 நாள் 21.07.2021 மதுரை மாநகராட்சி ஆணையரின் செயல்முறைகள் பிறப்பிப்பவர் மரு. கா.ட கார்த்திகேயன் இ.ஆப பொருள் பணியமைப்பு திரு. ண்முகம், உதவி ஆணையர் குணை ஆட்சியர்), மதுரை மாநகராட் பணியில் இருந்து விடுவித்து த்தரவிடுதல் சார்பு மதுரை மாநகராட் உதவி ஆணையராக அயற்பணியில் பணிட வரும் திரு. சண்முகம், துணை ஆட்சியர் என்பவரை 21.07.2021 பிற்பகல் அன்று மதுரை மாநகராட்சி பணியில் இருந்து விடுவித்து ஆணையிடப்படுகிறது. தனியர் தமது நியமன அலுவலர் முன் ஆஜராக வேண்டியது. மதுரை மாநகராட்சி பெறுநர்: திரு. சண் உதவி ஆணையர், மதுரை மாநகராட்சி தகவலுக்காக கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, செயலகம், சென்னை 2. வருவாய் நிர்வாக ஆணையர் எழிலகம், சென்னை 3. நகராட்சி நிர்வாக இயக்குநர், சாந்தோம், சென்னை நகல் கோப்புக்காக: நிர்வாகப் பிரிவு, மதுரை மாநகராட்சி கோப்புக்காக.'

ஆர்.எஸ்.எஸ் தலைவர் .. சிறப்பு ஏற்பாடுக்கு உத்தரவிட்ட மாநகராட்சி.. சர்ச்சை.. முழு விவரம்
Rayar A - e Oneindia Tamil :  மதுரை: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மதுரைக்கு நாளை வரும் நிலையில் அவர் செல்லும் இடங்களில் சிறப்பு பணி மேற்கொள்ள மதுரை மாநகராட்சி உத்தரவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை சத்தியசாய் நகரில் சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலில் நாளை முதல் 26 ஆம் தேதி வரை நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மவருகிறார்.
மோகன் பாகவத் வருகையை முன்னிட்டு மாநகராட்சி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மதுரை சத்தியசாய் நகரில் உள்ள சாய்பாபா கோயிலில் உள்ள நிகழ்ச்சிகளில் 22 ஆம் தேதி முதல் 26 அம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். 

 அதனால், அவரது வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் இருந்து அவர் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சிகளுக்கான இடங்களை தெரிந்து நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கான வழித்தடங்களில் உள்ள சாலைகளை சீரமைத்தால், தெருவிளக்குகளை பராமரித்தல், சாலைகளை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளை செய்திட வேண்டும்.



அவர் பயணிக்கும் நேரங்களில் சாலைகளில் மாநகராட்சி பணிகளான சீரமைப்பு பணிகள் எதுவும் நடைபெறால் இருப்பதை கண்காணித்தல் போன்ற பணிகளை கவனித்து வர அனைத்து முண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 ஆர்எஸ்எஸ் தலைவர் வருகைக்காக பிரதமர், முதல்வருக்கு இணையாக சிறப்பு உத்தரவு பிறப்பித்து சிறப்பு தூய்மைப்பணி, கண்காணிப்பு பணிக்கு என மாநகராட்சி உதவி ஆணையர் உத்தரவிட்டிருப்பது பல்வேறு சலசலப்புகளை உண்டாக்கி இருக்கிறது. நெட்டின்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் மதுரை மாநகராட்சியை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் , 'அரசின் எந்த விதிகளின் படி மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பதை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்க வேண்டும்' என்று கேட்டிருந்தார். இந்த நிலையில் இது குறித்து இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ஆர்எஸ்எஸ் தலைவர் உயர் பாதுகாப்பு பெற்றவர்.

இவர் மட்டுமல்ல மற்ற விஐபிகள் வரும்போது போலீஸார் அறிவுறுத்தலின் பேரில் இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பித்து அவர்கள் செல்லும் பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்து மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்படும். இப்படிப்பட்ட விஐபிக்கள் செல்லும்பகுதியில் ஏதாவது போக்குவரத்திற்கு தடை ஏற்படாமல் இருக்கவே இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: