வியாழன், 22 ஜூலை, 2021

பத்திரபதிவு அலுவலங்களில் உயர்மேடை இனி தேவையில்லை

May be an image of 1 person and text that says 'தமிழ்நாடு 22.07.2021 நம் தின/மதி பத்திரவு பதிவுத்துறை அலுவலங்களில் பதிவு அலுவலர்கள் இனி உயர்ந்த மேடையில் அமராமல் சரி சமமாக அமரும் இருக்கைகள் போட வேண்டும் -அமைச்சர் மூர்த்தி உத்தரவு. namdinamathi முக்கியச் செய்திகள் MANAM GROUP Solutions Heart... INSURANCE TRAINING CONSUL 88078 51597 Nibhaye Vaade SBI general LSTAR STAR SURAKSHA TheHealthinsurance மாதம் வெறும் ரூ. 330ல், 3 லட்சம் அளவில் HEALTH INSURANCE இன்றெ பெற்றிடுங்கள்.'

ஆலஞ்சியார்  :  சத்தமில்லாமல் திமுக சாதித்துக் கொண்டிருக்கிறது..
 பத்திரபதிவு அலுவலங்களில் உயர்மேடை இனி தேவையில்லை என்ற அறிவிக்கை அகம்பாவ சிந்தனையை அகற்றிட உதவும் ..
 பத்திர அலுவலங்களில் தன் சொத்துக்களை வாங்க விற்க செல்லும் போது நடத்தபடும் விதம் ஏதோ எஜமானிடம் நிற்பதை போலதோன்றும் ..
அலுவலரிடம் நடத்தைகளும் அதையொத்தே இருக்கும்.. மாற்றங்கள் சுயமரியாதையை உள்ளடக்கியதாக இருப்பதில் மகிழ்ச்சி..
கடந்த பத்தாண்டாய் அதிலும் கடந்த நான்காண்டுகளில் ஆர்எஸ்எஸ்காரர்களில் அரசு அலுவல்களில் ஊடுறுவியிருப்பது வெளிப்படையாக தெரிகிறது
மதுரை நகராட்சியின் நேற்றைய நடவடிக்கையும் எழுந்த எதிர்ப்பும் அதை அரசு கையாண்டவிதம் தமிழகத்தில் இனி அவர்கள் மெல்ல அகற்றபடுவார்கள் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறது


இன்னும் நிறைய பாசிச சித்தாந்திகள் மூளைசலவை செய்யபட்ட சங்கிகள்  தாமாக முன்வந்து வெளியேறவோ,
அல்லது இந்த அரசு சமூகநீதியை சுயமரியாதையை கொண்ட மக்கள் அரசு சட்டத்தை அரசியல் சாசனத்தை மதிக்கும் வெளிப்படையான அரசு இது திராவிட அரசு என்பதை உணர்ந்து செயல்படவேண்டும் ..
..
கலைஞர் நூலகம் அமைக்க பணம் இருக்கிறது ஜெயலலிதா பல்கலை அமைக்க பணமில்லாயா என எடப்பாடி கேள்வி எழுப்புகிறார் ..
திமுக எந்த திட்டத்தை கொள்கை முடிவை அறிவித்தாலும் அதற்கான நிதி ஆதாரத்தை முதலில் கண்டு பிறகு அறிவிக்கும் ..
வெறும் வெற்று பலகையோடு அறிவிப்பை வெளியிடும் முட்டாள்கள் அரசல்ல..
ஜெயலலிதா பல்கலைகழகம் அறிவிப்போடு நிற்கிறது
எய்ம்ஸ் மருத்துவமனையைபோல அதனால்தான் அண்ணா பல்கலையோடு இணைக்கபடுமென அறிவிப்பை உயர்கல்வி அமைச்சர் வெளியிட்டிருக்கிறார் ..
திமுக ஆட்சியை குறைகூற கூட எந்த தகுதியும் இல்லாதவர்கள் இந்த அதிமுக அடிமைகள் .. விஜய்பாஸ்கர் வீட்டு ரெய்டு அச்சுறுத்தல் என பன்னீர் பதறுகிறார் இப்படிதான் ஜெயலலிதாவும் சசிகலாவும் சொன்னார்கள்.. கடைசியில் சிறை சென்றதுதான் வரலாறு ..

ஜெயலலிதா இறுதி தீர்ப்பிற்கு முன் இறந்ததும் "புனிதர்" பட்டம் கட்டி நினைவிடம் அமைத்து
மக்கள் வரிப்பணத்தை வீணாக்கியதை போல செய்யவேண்டுமா .. சசிகலா திருடி என சொல்லும் வாய் ஜெயலலிதாவை நல்லவரைபோல பேசுவதின் பின்னில் இருக்கும் வர்ணம் தெரியாமல் இல்லை ..
ஜெயலலிதா பெயரில் பல்கலை கழகம் என்பது தவறான முன்னூதாரணம் ஆகிவிடும்.. "கொள்ளைக்காரி" பெயரில்
(அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சொத்துசேர்த்தது கூட இருந்தவர்கள் சேர்க்க உதவியது ) கல்விகூடமா என்ன..?..
குற்றவாளியென நிரூபிக்கபட்டவர் மரணம் அவரது தண்டனையை இல்லாமல் செய்ததே தவிர குற்றவாளி இல்லையென தீக்ப்பில்லை என்பதை எடப்பாடி உணர்தல் நன்று ..
..
இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி ..
நேர்மை,வெளிப்படை,அஞ்சாமை, சுயசிந்தனை, சுயமரியாதை கொண்ட திராவிட அரசு..
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை: