Karthikeyan Fastura : ரெம்ப வருடங்களுக்கு பிறகு நேரடி அரசியல் படம் பார்த்த அனுபவம் சார்பட்டாவில் கிடைத்தது.
அதற்கே இயக்குனர் ரஞ்சித்திற்கு நன்றி சொல்லவேண்டும்.
மலையாள மொழிப் படங்களில் நேரடி அரசியல் படம் வெளிவந்திருக்கிறது.
கம்யூனிசத்தை விமர்சித்தும் வரும் கொடி பிடித்தும் வரும் அததற்கான தர்க்க நியாயங்களுடன்.
அப்படி திராவிட கட்சிகளை வாழ்வின் அங்கமாக வரித்துக்கொண்ட கதாபாத்திரங்கள் கொண்ட காட்சியமைப்பு வந்து நான் பார்த்ததில்லை.
மறைமுகமாக கொடிபிடிக்கும் காட்சிகள் நிறைய வந்திருக்கிறது.
அவை கூட சமீபகாலங்களில் பார்க்க முடியாது.
எஸ்எஸ் சந்திரன், இயக்குனர் சந்திரசேகர்(விஜய் தந்தை), ராமராஜன், பாக்கியராஜ் போன்றோரின் படங்களில் தான் பார்க்கமுடியும்.
சில இயக்குனர்கள் கம்யூனிசத்தை வலியுறுத்தி படம் எடுத்தார்கள்.
இயக்குனர் ஜனநாதன், இயக்குனர் சேகர் சில நல்ல உதாரணங்கள்.
மற்றபடி திராவிட கட்சிகளில் இருந்து நிறைய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் வந்தாலும் வணிககாரணங்களுக்காக தங்கள் கட்சி நிலைப்பாட்டை கொள்கையை வலியுறுத்தும் காட்சிகள் வைப்பதில்லை.
இதையெல்லாவற்றையும் உடைத்து நேரடிக்காட்சிகளில் திமுகவையும், கலைஞரையும், பெரியாரையும், முதல்வர் ஸ்டாலினையும் குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல் மிசா காலத்து அடக்குமுறை எப்படி இருக்கும் என்பதையும் காட்சிகள், வசனங்கள், ஆவணபடகாட்சிகள் என்று சேர்த்து காட்டியிருப்பது உண்மையில் மிக புதிது. இன்றைய தேதிக்கு அவசியமானது.
வில்லன் கும்பலை காங்கிரஸ் ஆதரவு கொண்டவர்களாக காட்டியிருக்கிறார்கள். அதிமுகவை சந்தர்ப்பவாதிகளாக தேவைப்பட்டால் இருபுறமும் களமாடும் ஆட்களாக காட்டியிருக்கிறார்கள். இப்படி திமுக, காங்கிரஸ், அதிமுக என்று முக்கோண அரசியல் படமாக வந்திருக்கிறது.
சார்பட்டா ஒரு அரசியல்-கலை உடைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரஞ்சித் இதை தன் முதல்படத்தில் இருந்தே செய்தாலும் ஒவ்வொருசமயமும் அவரது துணிச்சல் கூடிக்கொண்டே செல்கிறது. தமிழ் திரையுலகம் கொண்டிருக்கும் மனத்தடைகளை தயக்கங்களை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துக் கொண்டே வருகிறார்.
சார்பட்டா தொடர்ந்து பேசுவோம்
Kathir RS : சார்பட்டா .. காஸ்ட்யூம் ஆராய்ச்சியே செய்யல..லேட்டஸ்ட் நைக் பனியன்லாம் கூட போட்டு விட்ருக்காங்க..
அந்த காலத்து கை பனியன் கட் பனியன் இத பத்தில்லாம் யோசிச்ச மாதிரியே தெர்ல..
ஆர்யா மூஞ்சி எப்படி பாத்தாலும் ஜில்லட் ப்ளேட்ல ஷேவ் பண்ண மாதிரி ஃப்ரெஷ்ஷா இருக்கு.
பாக்சர் ஆர்ட்டிஸ்டுக்கு நெஞ்சு முடி ஷேவ் பண்ற கலாச்சாரம் எப்ப ஆரம்பிச்சுதுன்னு யாராச்சும் சொன்னா தேவல..
ஹேர்ஸ்டைல் பத்தி டீடெய்லிங் இல்ல..எண்ணெய் வச்சு வழிச்சி சீவுனா போதும்னு விட்டுட்டாங்க..ஆர்ட்டிஸ்ட் எல்லாரும் நல்லா ஷாம்பூ போட்டு குளிச்சிட்டு வந்துருப்பாங்க போல..யாருக்குமே சிகை அலங்காரம் நேட்டிவிட்டி இல்ல..
அதே மாதிரி சட்டை காலரை பெருசா வச்சு தச்சா போதும்னு நெனச்சுட்டாங்க போல..
ஒரே ஒரு டர்க்கி டவல கூட காணும் படத்துல..திமுக துண்டை நல்லா காட்றாங்க..அதுவே பெரிய ப்ரொமோவாச்சேன்னு மத்ததெல்லாம் தேவயில்லன்னு விட்டாங்க போல..
அந்த காலத்தில் இருந்த மிகப்பிரபலமான தெலுகு வாடையடிக்கும் மெட்ராஸ் பாஷை மருந்துக்கும் இல்லை.
ஆர்யாவை ஒரு பாக்சிங் ஆசையுள்ள 25 வயது இளைஞனாக காட்ட இயக்குநர் நினைத்தாலும்..நமக்கு இவர் ஏனோ ஒரு ரிட்டையர்ட் பாக்சராகவே தெரிகிறார்.
நல்ல கதை நல்ல களம் ஆனால் மிகக் கேவலமான மேக்கிங்..
டைரக்டர் ஒரே ஒரு முறை சுப்ரமணியபுரம் படத்தை சார்பட்டா எடுப்பதற்கு முன் பார்த்திருக்கலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக