வழக்கறிஞர் பாண்டியன் |
Arumugam Selvi : நீதிக்கான சாட்சியம், இயக்குனர், வழக்கறிஞர். பாண்டியன் கொலையை மனித உரிமை என்.ஜி.ஓ. க்கள் மூடி மறைப்பது ஏனோ ?
நண்பர்களே, இந்த பதிவை பதிவு செய்வதன் நோக்கம் உண்மைகள் புதைக்கப்பட கூடாது.
அதுவும் 'சமூக நீதி' ஒரு போதும் அநீதிக்கு துணை போகாது என உறுதியாக சொல்லுவேன். நான் அறிந்ததை பொதுமக்கள் முன் வைப்பது எனது கடமையும் ஆகும்.
எனக்கு கடந்த 05.07.2021ம் தேதி பிற்பகல் 5.38க்கு திருநெல்வேலியில் இருந்து மனித உரிமை வழக்கறிஞர் தம்பி சுரேஷ்குமார் தொலைபேசியில் அழைத்து அண்ணா கடந்த இரு நாட்களுக்கு முன்பு 03.07.2021ம் தேதி பெங்களூரை மையமாக இயங்கும் Center for Law & Policy நிறுவனம் வன்கொடுமை சட்டம் குறித்த கூட்டம் காணொலி கூட்டம் (Zoom) நடத்தியது.
அதில் நானும் கலந்து கொண்டேன், பாண்டியன் அண்ணன் தான் வன்கொடுமை சட்டம் குறித்து பேசிக்கொண்டு இருந்தார்.
பேசி முடிக்கும் முன்பாகவே அவரை இருவர் தாக்கியதை பார்த்தேன். அப்போது பாண்டியனின் லேப்டாப் கேமரா சரிந்து மேலே ஃபேன் ஓடுவது தெரிந்தது. இணைப்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது.
அந்த நேரம் அவர் தன் அலுவலக வாயிலை திரும்பி பார்ப்பது போன்றும். கை அசைப்பு வாக்குவாதம் சத்தம் கேட்டது என்றார். எனக்கு ஏற்பட்ட உணர்வு கூட்டத்தில் இருந்த எல்லோரும் வந்தது. இறுதியாக பேசிய வழக்கறிஞர் அஜிதாவும் இதனை மேலும் உறுதிபடுத்தும் விதமாக கருத்துக்களை வைத்தார் என்றார்.
உடனே நான் அவரது மனைவி ஜெயசுதாவை தொடர்பு கொண்டு 06.05 மணிக்கு பேசினேன். அவர் கார்த்திக்தான் மதுரை தேவதாஸ் மருத்துவமனையில் சேர்த்தான் என்றும், நாற்காலியில் இருந்து கீழே விழுந்து அடிபட்டு விட்டதாகவும் சொன்னான். வயிற்று குடல் பகுதியில் காயம் மருத்துவர் அறுவை சிகிக்சை செய்து உள்ளார். பாண்டியன் இன்னும் நன்றாக பேசவில்லை பேசட்டும். இந்த விசயத்தை நமக்குள் வைத்து கொள்ளுங்கள் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றார்.
மேலும் ஜூம் மீட்டிங் இணைப்பு துண்டிக்கப்பட்ட போது கூட்டத்தை ஒருங்கிணைத்த பொறுப்பாளர் வழக்கறிஞர் பிரபு அவர்கள் பாண்டியனின் அலுவலக பணியாளர் கார்த்திக் என்பவருக்கு தொடர்பு கொண்டு சொல்லித்தான் கார்த்தி அலுவலகம் வந்து ரத்த காயத்தில் கிடந்த பாண்டியனை தூக்கி மருத்துவமனையில் சேர்த்து உள்ளார்.
எனக்கு கடந்த 12.07.2021ம் தேதி பிற்பகல் 3.22 மணிக்கு வழக்கறிஞர் தம்பியிடம் இருந்து பாண்டியன் இறப்பு செய்தி இடியாய் என் காதில் விழுந்தது. அழுதுகொண்டே மோட்டார் சைக்கிள் சென்று மருத்துவமனையில் பார்த்தேன். பாண்டியன் தலையில் தையல் போட்ட காயமும், வயிறு பெரிய அளவில் வீக்கமாகவும் இருந்தது. அப்போது பாண்டியன் அப்பா இன்னாசிமுத்து தாய் குளோரி அவரது தங்கை ஆகியோர் வந்து பாண்டியன் அறுவை சிகிக்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டதை போன்று அழுதார்கள். பாண்டியன் சிகிசையில் இருந்தபோது எங்களிடம் நீங்க வர வேண்டாம். நான் குணமாகிவிடுவேன் என்று சொன்னதாக கூறினார்கள். அப்போதுதான் பெற்றோருக்கும் 'தாக்குதல்' சம்பவ தகவல் மறைக்கப்பட்டு இருப்பதாய் அறிந்தேன்.
அங்கே நின்றுகொண்டு இருந்த எவிடென்ஸ் அமைப்பின் இயக்குனர் தம்பி கதிர் என்ற வின்சென்ட் ராஜ் மிடமும் இது அறுவை சிகிக்சை மரணம் அன்று கொலை என்று சொன்னேன்.
தொடர்ந்து அங்கே வந்த மக்கள் கண்காணிப்பகம் இயக்குனர் ஹென்றி டிபேன் அவர்களிடமும் வழக்கறிஞர் சுரேஷ்குமார் சொன்ன சம்பவத்தை சொன்னதும் என்னிடம் அவர் "நீங்கள் சம்பவத்தை நேரில் பார்த்தீர்களா ?" என்ற கேள்வியை கேட்டுவிட்டு பாண்டியன் மனைவியின் தந்தை இடம் போய் தனியே பேசிக்கொண்டார்.
தொடர்ந்து நானும் கதிரும் காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும் என்றதும் மீண்டும் ஹென்றி டிபேனே எங்களிடம் வந்து ஏற்கனவே இரு வழக்கறிஞர்களை அனுப்பி பாண்டி உயிரோடு இருக்கும் போது விசாரித்தேன். ஆனால் அவர் தானே கீழே விழுந்ததாக சொல்லிவிட்டார். உடலில் உள்ள காயங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றார். பாண்டியனுக்கு அடுத்து பேசிய சென்னை வழக்கறிஞர் அஜிதாவிடம் பேசினேன் ஒரு கை வந்து இழுப்பதாக மட்டுமே சொன்னார் என்றார் மக்கள் கண்காணிப்பக இயக்குனர் வழக்கறிஞர் ஹென்றி டிபேன்.
தொடர்ந்து பாண்டியன் உடலை ஆம்புலன்ஸ் மூலம் மனைவி ஜெயசுதாவிடம் ஒப்படைக்கப்பட்டு 13.07.2021ம் தேதி கடச்சனேந்தல் சி.எஸ்.ஐ தேவ ஆலயத்தில் வைத்து ஜெபம் செய்து கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே பாண்டியன் கடந்த சில ஆண்டுகளாக இயக்குனராக பணி செய்த திண்டிவனம் "சசி" அமைப்பின் இயக்குனர் ரமேஸ் நாதன் என்பவரும் ஹென்றி டிபேனும் இருவருமே தனியே சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்கள். காரணம் இவர்கள் இருவருமே பாண்டியனை டெல்லியில் உள்ள NCDHR, Dalit Foundation போன்ற அமைப்பிலும் திண்டிவனம் "சசி" அமைப்பிலும் பாண்டியனை பணிநியமித்து நேரடி நிர்வாகம் செய்தவர்கள். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்களே.
மேலும் பாண்டியன் தாக்கப்பட்ட போது பதிவான ஜூம் மீட்டிங் வீடியோ ஆவணத்தை அந்த அமைப்பிடம் கோரி இருந்தேன். அவர்களிடம் பாண்டியன் மனைவி ஜெயசுதா போன் செய்து யாருக்கும் அதை கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக எனக்கு தரவும் மறுத்தனர். அதே ஆவணம் மதுரையை மையமாக கொண்டு இயங்கும் மனித உரிமை அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் அறிய வருகிறேன்.
எனவேதான் தம்பி பாண்டியன் கொலையை இந்த நிறுவனங்கள் ஊமை வேலைகளை செய்து மூடிவிட துடிப்பது நமக்கு பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்துகிறது. பாண்டியன் மனைவியாக இருந்தாலும் அவரது பெற்றோராக இருந்தாலும். அல்லது இந்த ஊமை நிறுவனங்களாக இருந்தாலும் கொலையை மறைப்பது, கொலையாளிகளைவிட கொலையை மறைக்கிற கொலையாளிகளுக்கு இந்திய தண்டனை சட்டத்தில் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்கிறதற்கு பாத்தியப்பட்டவர்கள்.
தம்பி பாண்டியன் தனி மனிதன் அன்று. இந்த சமூகத்தின் பிரதிநிதி. விளிம்பு நிலை மக்களுக்களின் விடுதலைக்கான உரிமைக்குரல் போராளி. தமிழகம் தாண்டி, இந்திய முழுவதும் அவரது உறவுகள் உண்டு. ஆகவே தொண்டு நிறுவனங்கள் விபத்து என்று மூடி மறைப்பதை தவிர்த்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.
தம்பி பாண்டியன் மீது உண்மையான பற்று கொண்டோர் இக்கொலைக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். தமிழக அரசு பாண்டியன் கொலையை தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்து சட்ட பூர்வமாக மேல் நடவடிக்கை மேற்கொண்டு 03.07.2021ம் தேதி தம்பி பாண்டியை தாக்கி மரணத்திற்கான காயம் ஏற்படுத்திய அனைத்து கொலையாளிகளை சிறையில் தள்ளப்பட வேண்டும் என்பதே என் ஆதங்கம்.
கடந்த 03.07.2021ம் தேதி தனிமையில் மதுரை புதூரில் உள்ள அவரது "விட்னஸ் ஃபார் ஜஸ்டிஸ்" அலுவலகத்தில் தனிமையில் இருந்து ஜூம் மீட்டிங் பேசிக்கொண்டு இருந்த போது அவர் அலுவலகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் தூண்டுதலில் மூன்று ரௌடிகள் வந்து அவரை தாக்கியதாகவும் அதனாலேயே அவருக்கு தலையில் காயமும். வயிற்றின் குடல்பகுதி சிதைந்தும் உள்ள காயங்களால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார் அறிய முடிகிறது.)
-கி.ஆறுமுகம்.
சமூக நீதி. மதுரை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக