செவ்வாய், 20 ஜூலை, 2021

ரூ.17,141 கோடி முதலீட்டில் 35 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பம்

 தினத்தந்தி :சென்னை கிண்டியில் உள்ள தனியாா் நட்சத்திர ஓட்டலில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு' விழா நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தொழில்துறை முதன்மை செயலாளா் முருகானந்தம், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பூஜா குல்கா்னி உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.17,141 கோடி முதலீட்டில் 35 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
55 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டோமொபைல், காற்றாலை, எரிசக்தி, சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியுள்ளன.



குறிப்பாக, கேப்பிட்டல் லாண்ட், அதானி, ஜே.எஸ்.டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழக அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. மேலும், இந்த நிகழ்ச்சியின் வழியே ரூ.4,250 கோடி மதிப்பில் 9 தொழில் திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் ரூ.7,117 கோடி மதிப்பிலான 5 திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் பேசும் போது புதிய திட்டங்கள் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 83432 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறினார்.,

நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும் போது கூறியதாவது:-

தமிழ்நாட்டின் கலை, பண்பாடு மிகவும் தொன்மையானது நம்பிக்கையூட்டும் எதிர்காலத்தை அளித்து வந்துள்ளது.  தமிழ்நாடு போட்டியென்பது வாழ்வின் அனைத்து பக்கங்களிலும் எழுதப்படாத சட்டமாகவுள்ளது என கூறினார்

கருத்துகள் இல்லை: