கலைஞர் செய்திகள் : மாணவர்களின் சிரமத்தை உணர்ந்து தமிழ் வழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் புத்தகங்களை அச்சிடும் பணியை தமிழ்நாடு அரசு கொடுத்துள்ளதாக திண்டுக்கல் ஐ.லியோனி கூறியுள்ளார்.
இனி தமிழிலும் மருத்துவம், பொறியியலை படிக்கலாம்; மாணவர்களின் சிரமத்தை உணர்ந்த தி.மு.க அரசு -ஐ.லியோனி தகவல்
தாய்மொழியாம் தமிழில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு புத்தகங்கள் அச்சடிக்கும் பணியை தமிழ்நாடு பாடநூல் கழகத்திடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்படைத்துள்ளதாகவும் அண்ணா, கலைஞரின் கனவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார் என தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுகல் ஐ.லியோனி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும் கிடங்கை தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுகல் ஐ.லியோனி ஆய்வு செய்தார். திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய லியோனி தமிழக முதல்வர் தன்னை பாடநூல் கழக தலைவராக நியமனம் செய்ததிலிருந்து மாநிலம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் திருவள்ளூர் கிடங்கிலிருந்து 860 பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது என்றும் இதுவரை 400 பள்ளிகளுக்கு புத்தகம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தற்போது ஆங்கில வழியில் மருத்துவம் பொறியியல் படிக்கும் மாணவர்களின் சிரமத்தை உணர்ந்து தமிழ் வழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் புத்தகங்களை அச்சிடும் பணியை தமிழக முதல்வர் எனக்கு கொடுத்துள்ளார். அதன்படி விரைவில் உயர் கல்வி பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி தொடங்கப்பட்டு வழங்கப்பட உள்ளது என்றார்.
இதன் மூலம் அண்ணா, கலைஞர் ஆகியோரது கனவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.. இந்நிகழ்ச்சியின் போது நகர செயளாலர் ரவிச்சந்திரன், பொருப்புக்குழு உறுப்பினர் திராவிட பக்தன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பாடநூல் கழக அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாக்கள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக