மத்திய பிரதேசத்தில் இம்மாதம் தேர்தல் நடந்து அடுத்த மாதம் 11 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
ம.பி-யில் மாயாவதி-காங்கிரஸ் கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்பட்டது
ஆனால் இரு தரப்புக்குமான பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை
ம.பி-யின் 230 தொகுதிகளுக்கும் ஒரு கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது
மத்திய
பிரதேசத்தில் இன்னுற் ஒரு சில நாட்களில் தேர்தல் நடக்க உள்ளது. இந்தத்
தேர்தலில் காங்கிரஸுடன் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைத்து
களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் கூட்டணி
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இது அம்மாநில தேர்தலில் பெரும்
தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச
காங்கிரஸின் முக்கிய புள்ளிகளில் ஒருவரான கமல்நாத், மாயாவதியுடன் ஏன்
கூட்டணி முறிவு ஏற்பட்டது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து கமல்நாத் என்.டி.டி.வி-யிடம் பேசும்போது, ‘மாயாவதி கேட்ட தொகுதிகளும், கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கையும் வெற்றி பெருவதற்கு உகந்த வகையில் இருக்கவில்லை. நாங்கள் மாயாவதிக்கு மொத்தம் இருக்கும் 230 தொகுதிகளில் 25 முதல் 30 தொகுதிகள் வரை ஒதுக்கத் தயாராக இருந்தோம். ஆனால், மாயாவதி 50 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று கேட்டார்' என்று கூறினார்.
அவர் மேலும், ‘சிந்தவ்ரா தொகுதி வேண்டும் என்று கோரினார். அதைப் போன்று சில இடங்களிலும் அவர் சீட் கொடுக்கும்படி கேட்டார்.
அந்த இடத்தில் எல்லாம் பகுஜன் சமாஜ் வேட்பாளர் நின்றால், 1000 வாக்குகள் கூட கிடைக்காது. இருப்பினும், மாயாவதி ஏன் அப்படி கேட்டார் என்பது எனக்குத் தெரியவில்லை' என்று விளக்கம் அளித்தார்.
மத்திய
பிரதேசத்தில் பட்டியல் இனத்தவர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில்
காங்கிரஸுக்கு கடந்த சில முறைகளாக அதிக வாக்குகள் கிடைத்து வருகின்றன.
மாயாவதியுடன் கூட்டணி அமைந்திருந்தால், காங்கிரஸ் அந்த இடங்களில் இன்னும்
சுலபமாக வெற்றி பெற்றிருக்கும் என்று பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போது
மாயாவதியும் காங்கிரஸும் போட்டி போடுவதால், இருவரும் வாக்குகளை பிரிக்க
வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் தாக்கம் தேர்தல் முடிவிலும்
எதிரொலிக்கலாம்.
மத்திய பிரதேசத்தில் இம்மாதம் தேர்தல் நடந்து அடுத்த மாதம் 11 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
இது குறித்து கமல்நாத் என்.டி.டி.வி-யிடம் பேசும்போது, ‘மாயாவதி கேட்ட தொகுதிகளும், கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கையும் வெற்றி பெருவதற்கு உகந்த வகையில் இருக்கவில்லை. நாங்கள் மாயாவதிக்கு மொத்தம் இருக்கும் 230 தொகுதிகளில் 25 முதல் 30 தொகுதிகள் வரை ஒதுக்கத் தயாராக இருந்தோம். ஆனால், மாயாவதி 50 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று கேட்டார்' என்று கூறினார்.
அவர் மேலும், ‘சிந்தவ்ரா தொகுதி வேண்டும் என்று கோரினார். அதைப் போன்று சில இடங்களிலும் அவர் சீட் கொடுக்கும்படி கேட்டார்.
அந்த இடத்தில் எல்லாம் பகுஜன் சமாஜ் வேட்பாளர் நின்றால், 1000 வாக்குகள் கூட கிடைக்காது. இருப்பினும், மாயாவதி ஏன் அப்படி கேட்டார் என்பது எனக்குத் தெரியவில்லை' என்று விளக்கம் அளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக