nakkheeran.in- kalaimohan" :
டெல்லி
சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரதமர் மோடியை நேரில்
சந்தித்து கஜா புயல் பாதிப்புகளுக்கான நிவாரணத் நிதியை கோரி உள்ளார்.
தமிழகத்தின் கடந்த 16ஆம் தேதி ஏற்பட்ட கஜா
புயல் தாக்கத்தினால் டெல்டா மாவட்டங்களில் உள்ள தென்னை மரங்கள், வீடுகள்
மற்றும் படகுகள், மின்சார கம்பங்கள் போன்றவை சேதமடைந்து பொதுமக்கள்
அடிப்படை வசதிகள் இன்றி சாலை மறியல் செய்யும் அளவிற்கு புயலின் பாதிப்பு
வளர்ந்துள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ள
பகுதிகளுக்கு அமைச்சர்கள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு போர்க்கால
அடிப்படையில் தமிழக அரசு நிவாரண பணிகளை முடுக்கி உள்ளது.
அதேபோல் நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமி புயல் பாதிப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதற்கு முன்னரே கஜா புயல் சேத அறிக்கை தயாரித்த பின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நிவாரண நிதி கோரி இருப்பதாக அறிவித்திருந்த நிலையில், நேற்று மாலை அறிக்கையுடன் டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. அதன்பின் அங்கு அதிமுக எம்பிக்களை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்திய பின் இன்று காலை சுமார் 9.30 மணி அளவில் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து புயல் சேதத்திற்கு முதற்கட்ட நிதியாக 13 ஆயிரம் கோடி நிவாரணத்தொகை வழங்கிட வேண்டும் என கோரியுள்ளார். அதேபோல் புயல் பாதித்த பகுதிகளை மத்திய ஆய்வுக்குழு நேரில் ஆய்வு செய்யவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அவசர நிவாரண நிதியாக 1,500 கோடியை வழங்க வேண்டும் என மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளதார் எடப்பாடி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக