மின்னம்பலம் :கஜா
புயல் காரணமாக டெல்டா
மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் ஏற்பட்ட சேதத்தை
முழுமையாக மதிப்பீடுசெய்து உரிய இழப்பீடு வழங்க கோரிய மனுவுக்கு
பதிலளிக்கும் படி, மத்திய -மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை
மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்தன.இந்த மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களில் சேதங்கள் மதிப்பீடு செய்யப்படவில்லை எனவும், அவற்றைமதிப்பீடு செய்யக் கோரியும் சென்னை கொரட்டூரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், புயல் காரணமாக தஞ்சையில் 83 கிராமங்களும், புதுக்கோட்டையில் 43 கிராமங்களும், நாகையில்87 கிராமங்களும் பெருத்த சேதத்தை சந்தித்துள்ளன எனக் கூறியுள்ளார்.
இக்கிராமங்களில் 2 லட்சம் தென்னை மரங்கள் விழுந்து விட்டதாகவும், ஹெக்டேருக்கு 2.64 லட்சம் ரூபாய்இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளதாகவும், அது போதுமானதல்ல எனவும் மனுவில்குறிப்பிட்டுள்ளார்.
பல கிராமங்களுக்கு நிவாரண உதவிகள் சென்றடையவில்லை என்பதால், அந்த கிராமங்களுக்கு உடனடியாகநிவாரணப் பொருட்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், சேதத்தை முழுமையாக மதிப்பீடு செய்யஉத்தரவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இந்த மனுவை இன்று(நவம்பர் 23) விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் ஆகியோர்அடங்கிய அமர்வு, இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் வரும் 29ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக