புதன், 21 நவம்பர், 2018

பாடகிக்கு தலையில் ஆபரேஷன் .. .. பாடிக்கொண்டே ... மூளையின் திறனுக்காக .. அமெரிக்கவில்

Hemavandhana - ONEINDIA TAMIL ON : வாஷிங்டன்: அமெரிக்கா முழுசும் இந்த பொண்ணை பத்திதான் பேச்சா கிடக்கு!! 
அமெரிக்காவின் சீட்டல் நகரை சேர்ந்த ஒரு இளம்பெண் கிரா லேகாநெட்டி. 19 வயசுதான் ஆகிறது. இவர் நன்றாக பாடுவார். அழகான இசைக்கலைஞர். எங்கெல்லாம் மேடை கண்ணில் படுதோ அங்கெல்லாம் பாடிக் கொண்டே இருப்பார்.
இந்நிலையில் ஒருநாள் அவருக்கு வலிப்பு வந்துவிட்டது. அந்த வலிப்பு காரணமாக மூளையும் பாதிக்கப்பட்டு விட்டது. விளைவு, அவர் ஏதாவது சிந்தித்தாலோ, யோசித்தாலே, அல்லது ஒரு செயலை செய்தாலோ அதில் இடைஞ்சல் ஏற்பட்டு விடும். 
மூளையில் ஆபரேஷன் மூளையில் ஆபரேஷன் அந்த செயலை முழுமையாக, சிறப்பாக, சரியாக செய்ய முடியாமல் போய்விடும். இதுதான் அவரது பிரச்சனை. இதற்காக அமெரிக்காவில் சீட்டல் நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டரை பார்த்தார். அவர்களும் பல டெஸ்ட் எடுத்து பார்த்துவிட்டு, மூளையில் ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.
ஆபரேஷன் செய்ய வேண்டுமென்றால் ஒரு சிக்கல் ஏற்பட்டது. அதாவது, பாடகிக்கு மூளையில் ஆபரேஷன் செய்வதற்கு முன்பு, அவருடைய பாடும் திறனை மூளைக்கு தெரியப்படுத்தி விழிப்பை உண்டாக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அதற்காக பாடகியிடம் சென்று ஒரு கண்டிஷனை டாக்டர்கள் போட்டார்கள். அது என்னவென்றால், ஆபரேஷன் செய்யும்போது பாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் அது. 
 நம்ம பாடகி சும்மாவே பாடி கொண்டிருப்பார். டாக்டர்கள் இப்படி சொன்னதும், பாட ஆரம்பித்துவிட்டார். ஆபரேஷன் ஆச்சே, அதுவும் மூளைக்கு ஆபரேஷன் செய்கிறார்களே, என்ன ஆகுமோ என்ற பயமே இல்லாமல் தன்னம்பிக்கையுடன் பாட ஆரம்பித்துவிட்டார். 48 மணி நேரம் 48 மணி நேரம் அவர் பாட துவங்கியதும் ஆபரேஷனும் தொடங்கியது. ஆபரேஷன் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது, பாட்டு ஒரு பக்கம் பாடப்பட்டது. ஆபரேஷன் சக்ஸஸ்தான்... 
ஆபரேஷன் நடந்து 48 மணி நேரம் கழித்தும் பாடிக் கொண்டே இருந்தார்! துணிச்சல் உண்மையிலேயே 19 வயசு பெண்ணின் இந்த துணிச்சலுக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு முயற்சிக்கு பாடகி ஒத்துழைக்கவில்லையானால் நிலைமை ரொம்ப கஷ்டமாகி இருக்கும். பாடகி பாட்டு பாட... டாக்டர்கள் ஆபரேஷன் நடத்த... என்று இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கருத்துகள் இல்லை: