தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல். |
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்த வழக்கு தொடர்பான முக்கியமான விசாரணைகள் அனைத்தையும் தடுத்தார் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. ராகேஷ் அஸ்தானா, டிஎஸ்பி தேவேந்திர குமார் இருவருக்கிடையே பறிமாறிக் கொள்ளப்பட்ட வாட்ஸ்-அப் செய்திகள் வழக்கு விசாரணைக்கு முக்கியமான ஆதாரங்களாக கருதப்பட்ட நிலையில், அவற்றை பறிமுதல் செய்வதை அஜித் தோவல் தடுத்ததாகவும் அந்த மனு தெரிவிக்கிறது. பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கைது நடவடிக்கைகளிலிருந்து அஸ்தானாவை காப்பாற்றியதையும் மனுவில் தெரிவிக்கிறார் சின்ஹா.
அதிகாரமிக்க சில நபர்களுக்கு எதிரான விசாரணையில் ஈடுபட்டிருக்கும் தன்னை தற்போதைய தற்காலிக சிபிஐ இயக்குனர் பணிமாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கிறார் எனவும் இது உள்நோக்கம் கொண்டது, குற்றத்தை விசாரிக்கும் அதிகாரியையே குற்றவாளியாக்கும் செயல் எனவும் தெரிவித்திருக்கிறார்.
தன்னை இடமாற்றம் செய்த அக்டோபர் 24-ம் தேதிக்கு முந்தைய இரவு, பிரதமர் அலுவலகம் தலையிட்டு அனைத்து பிரச்சினைகளையும் முடிவுக்கு கொண்டு வரும் என ரா அதிகாரி சமந்த் கோயல் (இவர் மீது லஞ்சப் புகார் விசாரணை உள்ளது) தெரிவித்ததாக சிபிஐ அதிகாரி ஒருவர் தன்னிடம் சொன்னதாக சின்ஹா மனுவில் தெரிவித்துள்ளார். ஆனால், அடுத்த நாள் முழு விசாரணை குழுவும் இடமாற்றம் செய்யப்பட்டது.
படிக்க:
மத்திய இணை அமைச்சர், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரின் பெயரை மட்டுமல்ல, மொயின் குரேஷி பணப் பரிமாற்ற வழக்கில் இடைத் தரகர்களாக செயல்பட்ட மனோஜ் பிரசாத், சோமேஷ் பிரசாத் ஆகியோரின் பெயர்களையும் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் சின்ஹா.
மனோஜ் பிரசாத், சிபிஐ-யால் கைது செய்யப்பட்டபோது, தனக்கு ‘பெரிய இடத்து’ தொடர்புகள் இருப்பதாகவும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது எனவும் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். மனோஜ் பிரசாத்தின் அப்பா தினேஷ் பிரசாத் முன்னாள் ரா அதிகாரியாக பணியாற்றியவர். அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் நெருக்கமாக இருந்தார். அதுபோல மனோஜின் சகோதரர் சோமேஷ், துபாயில் பணியாற்றிக் கொண்டிருந்த ரா அதிகாரி சமந்த் கோயலுடன் நெருக்கமாக இருந்தார். இத்தனை தொடர்புகளை வைத்துள்ள தன்னால், விசாரணை அதிகாரிகளை தூக்கியெறியவும் ஒழித்துக் கட்டவும் முடியும் என மனோஜ் மிரட்டியதாக மனுவில் தெரிவிக்கிறார் சின்ஹா. இதற்கெல்லாம் தன்னிடம் ஆதாரம் உள்ளதாகவும் சின்ஹா தெரிவித்துள்ளார். மனோஜின் மொபைல் போனிலிருந்து பெறப்பட்ட குறுஞ்செய்திகள் மூலம் அவருக்கு இருக்கும் ‘பெரிய இடத்து’ தொடர்புகள் தெரிய வந்ததாகவும் சின்ஹா தெரிவிக்கிறார்.
படிக்க:
?
இந்நிலையில், சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. அலோக் வர்மாவுக்கு எதிராக மத்திய விசாரணை ஆணையம் நடத்திய விசாரணை குறித்தும் உச்ச நீதிமன்றத்தில் இன்று அறிக்கை சமர்பிக்கப்பட இருக்கிறது.
ஆக மொத்தத்தில், மோடி தலைமையிலான அரசு அடி முதல் முடி வரை முறைகேடு செய்யும் அமைச்சர்களாலும் அதிகாரிகளாலும் நிரம்பியிருக்கிறது என்பதற்கு ஆதாரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
செய்தி ஆதாரம்:
CBI Officer’s Explosive Petition: ‘Minister Paid, Doval Blocked Search for Evidence’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக