வெள்ளி, 23 நவம்பர், 2018

நிவாரண பொருட்களை அதிமுகவினர் வழிமறித்து கைப்பபற்றி .. புதுகோட்டையில் பாதிக்கப்பட்ட ..

புதுக்கோட்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக கொண்டுவந்த நிவாரணப் பொருட்களை கைப்பற்ற முயற்சி: நாகப்பட்டினம்  அருகே வட்டாட்சியரை தாக்கி பொருட்கள் கொள்ளை; திருவாரூரிலும் பறிமுதல் 
tamil.thehindu.com : புதுக்கோட்டை ஈரோட்டில் இருந்து புதுக்கோட் டைக்கு வந்த நிவாரண பொருட் களை அதிமுக பிரமுகர் மடக்கி கைப்பற்ற முயன்றதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘கஜா’ புயலின் கோரதாண்ட வத்தால் புதுக்கோட்டை மாவட் டத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இந்த மக்களுக்கு ஈரோட்டில் உள்ள 'ஈரோடு சிறகு கள்' எனும் சமூக சேவை அமைப்பு, நேற்று முன்தினம் புதுக்கோட்டை கொண்டுவந்த நிவாரணப் பொருட் களை அதிமுக பிரமுகர் ஒருவர் லாரியோடு மடக்கி கைப்பற்ற முயன்றதைக் கண்டித்து போராட் டத்தில் ஈடுபட்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

சென்னையில் பெரு வெள்ளம், கடலூரில் தானே புயல் போன்ற பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு பிற மாவட்டங்களில் இருந்து, கொண்டு சென்ற நிவாரணப் பொருட் கள் அப்பகுதியைச் சேர்ந்த அரசி யல் கட்சியினர் சிலர் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதேபோன்று, புதுக்கோட்டை மாவட்டத்தில் உடைமைகளை இழந்து நிற்கும் மக்களுக்கு கொண்டுவரப்பட்ட பொருட்களை அதிமுக பிரமுகர் மடக்கி பறிக்க முயன்றதற்கு கடுமையான கண்ட னக்குரல்கள் சமூக வலை தளங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இதுகுறித்து நிவாரண பொருட் களை சேகரித்து வந்த ‘ஈரோடு சிறகுகள்’ அமைப்பினர் கூறியது:
புதுக்கோட்டையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்புள்ள சுமார் 15 டன் நிவாரண பொருள்களை ஒரு லாரி யில் நேற்று முன்தினம் புதுக்கோட் டைக்கு கொண்டு வந்தோம். இந்த பொருள்களை விநியோகிக்க 3 கிரா மங்களை தேர்வு செய்திருந்தோம்.
அந்த கிராமங்களுக்கு லாரியை இயக்கியபோது, எங்களுக்கு உதவி செய்வதாகக்கூறி எங்களது லாரியை காரில் வந்த அதிமுக பிரமுகர் ஒருவர் தன்வசப் படுத்தினார். திட்டமிட்ட கிராமங் களுக்கு செல்லாமல் தனக்கு வேண்டியவர்கள் வசிக்கக்கூடிய பகுதிக்கு அவர் லாரியை ஓட்டு மாறு நிர்பந்தித்தார். செல்லும் வழியில் மீட்பு பணியில் ஈடுபட் டோர், சாலையோரம் அமர்ந்திருந்த பொதுமக்களுக்கு நிவாரண பொருள்களை கொடுக்க முயன்ற போது அந்த அதிமுக பிரமுகர் தடுத்துவிட்டார்.
பின்னர், கறம்பக்குடி அருகே உள்ள ஒரு இடத்தில் மொத்தமாக இறக்கி வைக்குமாறு கட்டாயப் படுத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். பின்னர், அங்கிருந்து வாராப்பூர் சென்றபோது, அங்கு, எங்களை கொலை செய்வதாக மிரட்டினார். இதைக்கண்டித்து அங்கேயே அமர்ந்து போராட்டத் தில் ஈடுபட்டோம். இதையடுத்து உணவு பாதுகாப்பு துறையில் இருந்து வந்த ஒரு அலுவலரை வைத்துக்கொண்டு பல்வேறு கிராமங்களுக்கு சென்று நிவாரண பொருள்களை விநியோகித்தோம் என்றனர். பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு கொண்டுவந்த நிவாரண பொருள்களை அதிமுகவினர் மிரட்டி பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வட்டாட்சியர் மீது தாக்குதல்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு வருவாய்த் துறை சார் பில் நிவாரண உதவிகள் வழங்கப் பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்திலிருந்து, வேதாரண்யம் அடுத்த பெரிய குத்தகையில் பாதுகாப்பு முகாமில் உள்ள பொதுமக்களுக்கு சமை யல் செய்வதற்காக ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்களு டன் வேதாரண்யம் வட்டாட்சியர் தர் நேற்று முன்தினம் இரவு அரசு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கீழையூர் ஒன்றியம் கோவில்பத்து அருகே மர்ம நபர் கள் சிலர், வட்டாட்சியரின் வாக னத்தை மறித்து தர் மற்றும் வாகன ஓட்டுநர் ஆகியோரை தாக்கினர். மேலும், நிவாரணப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதைக் கண்டித்து மாவட்ட வரு வாய்த் துறை அலுவலர் சங்கம் சார் பில், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
திருவாரூரிலும் சம்பவம்
இதுகுறித்து தஞ்சை கோட்ட எல்ஐசி ஊழியர் சங்கத் தலைவர் புண்ணியமூர்த்தி கூறியபோது, “இதேபோன்று ஏராளமான சம்பவங் கள் நடந்து வருகின்றன. திருவாரூர், நாகை மாவட்டத்தில் பலரும் பாதிக் கப்பட்டுள்ள நிலையில் நிவாரணப் பொருட்களை திட்டமிட்டே சூறை யாடுவதற்கு இப்படி ஒரு கும்பல் கிளம்பியிருக்கிறது. எனவே, வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்ற நிவாரணப் பொருட்களை தேவை யான பகுதிகளுக்கு சென்று வழங்கு வதற்கு அரசே ஒரு நிவாரண மையத்தை அமைத்து, தக்க பாது காப்புடன் உரிய கிராமங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்

கருத்துகள் இல்லை: