வியாழன், 22 நவம்பர், 2018

ராஜஸ்தான் 2,100 கிலோ இறைச்சி நாய்க்கறி அல்ல, செம்மறி ஆட்டின் இறைச்சிதான்!

செம்மறி ஆட்டிறைச்சிதான்!மின்னம்ப்லம் : ராஜஸ்தானிலிருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட 2,100 கிலோ இறைச்சி நாய்க்கறி அல்ல, அது செம்மறி ஆட்டின் இறைச்சிதான் என்று சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி உறுதி செய்துள்ளது.
கடந்த 17ஆம் தேதியன்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து சென்னை எழும்பூர் வந்த ரயிலில் 2,100 கிலோ இறைச்சியைப் பறிமுதல் செய்தனர் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள். தோற்றத்தில் அது நாய்கறி போன்றிருந்ததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. நாய்க்கறியா அல்லது கெட்டுப்போன ஆட்டிறைச்சியா என்ற சந்தேகத்தின் காரணமாக, அவற்றைச் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அனுப்பினர் உணவு பாதுகாப்புத் துறையினர்.


இது குறித்து விசாரிக்கத் தனிப்படை ரயில்வே போலீசார் ஜோத்பூர் சென்றதாகவும் தகவல் வெளியானது. இதற்கிடையில், ரயிலில் சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட இறைச்சி குறித்த ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. கால்நடைகள் பாதுகாப்பு அமைப்பு தாக்கல் செய்த மனுவில், இறைச்சி குறித்து உணவுத் துறை அதிகாரிகள் அறிக்கை வெளியிடாதது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறைச்சி குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அது நாய் இறைச்சி அல்ல செம்மறி ஆட்டிறைச்சிதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: