புதன், 21 நவம்பர், 2018

திருமாவளவன் : ராமதாசின் மாற்றத்தை அவரது அறிக்கை உணர்த்துகிறது’.. காலம் கனிந்து வருகிறது

ttnakkheeran.in - arunpandian" : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நந்தீஷ் - சுவாதி தம்பதிகள் சாதிய ஆணவப்படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்  இன்று 20 தேதி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.  
இந்த ஆரப்பாட்டத்தில்  கலந்துக்கொண்டு தலைமையேற்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ’’காலம் காலமாக  சாதிய ஆணவக்கொலை நடைப்பெற்றுத்தான்  வருகிறது.  தற்போது சமூக ஊடகங்களின் வளர்ச்சியால் வெளிச்சத்துக்கு வந்துக்கொண்டிருக்கிறது.
நந்தீஷ் - சுவாதி ஆணவப்படுகொலைக்கு கூலிப்படையினரால் செய்யப்பட்டிருக்க வய்ப்புக்கள் உண்டு.  தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரத்தை தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  தற்போது 500, 1000 ரூபாய்களுக்கு கொலை செய்யும் அவலம் தொடர்கிறது.


நந்தீஷ் - சுவாதி கொலை வழக்கை தமிழகமும்,கர்நாடகமும் விசாரித்தால் மற்ற குற்றவாளிகளை பிடிக்க வாய்ப்பில்லை. அதனால் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும்.

ஓசூரில் ஒரு வருடத்திற்குள்ள 7 சாதிய கொலைகள் நடந்திருப்பதாகவும், இந்த பகுதியில் சாதிய பாகுபாட்டால் பிரச்சனைகள் அதிகரித்து வருவதால் ஓசூரை சாதிய வன்கொடுமை பிரதேசமாக அறிவிக்க வேண்டும்.

தற்போது சாதியப்பாகுபாடுகள் குடியிருப்பு பகுதிகளில் மட்டுமல்லாமல் காவல்துறை, வருவாய்துறை என எங்கும் சாதி, எதிலும் சாதி வளர்ந்திருப்பது வெட்கக்கேடானது எனவும்,   சாதிய பிரச்சனைகளை அரசியலில் பங்கேற்காத அமைப்புகளும் பேசுவதில்லை,
பெரிய கட்சிகளும் பேச துணிவில்லாதபோது, பொதுவாழ்க்கையில் இருப்பதில் அர்த்தமில்லை,
காலம் கனிந்து வருகிறது, ராமதாஸ் திருந்தி வருகிறார் என்பதை அவரது அறிக்கை உணர்த்துகிறது.
சாதிய ஆணவப்படுகொலைகளுக்கு விசிக மட்டும் பேசுகிறது பெரிய கட்சிகள் பேசுவதில்லை என ஊடகங்கள் கேள்வி கேட்கின்றன, விடுதலை சிறுத்தைகள் கட்சி உருவாக்கப்பட்ட பின்பே தலித்களும் வாய்திறக்க ஆரம்பித்துள்ளனர்.

 இளைஞர்கள் தன்னுடைய காதலிகளை பாதுகாக்க, காதலிகளின் தற்கொலையை தடுக்கவே எதிர்வினை அறிந்தும் திருமணம் செய்கிறார்கள்.
ஆணவக்கொலைகளை தடுக்க தனிச்சட்டத்தை உடனடியாக இயற்ற முடியாது என்றாலும், கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என பேசினார். முடிவில்  விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நந்தீஷ் குடும்பத்திற்கு 2.50 லட்சம் ரூபாய் நிதியாக வழங்கப்பட்டது.

நந்திஷ் சுவாதி கொலை வழக்கில் மேலும் மூன்று பேர் கைது வெங்கடேசன், அஸ்வத்தப்பா,சாமிநாதன் மாண்டியா போலீஸ் கைது செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: