செவ்வாய், 20 நவம்பர், 2018

கஜா அமைச்சர்கள் புடை சூழ ஐந்து நாள் கழித்து சென்று ஐந்து நிமிட ஆய்வு செய்த எடப்பாடி பழனிசாமி

THE HINDU TAMIL: 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடச்
சென்ற முதல்வரை மக்களால் காண முடியவில்லை என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"முதலில் மக்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லட்டும். அதன் பிறகு அவர் என் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்கிறேன். டெல்டா மாவட்டங்களில் மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கான வீடுகள் இடிந்து நொறுங்கியிருக்கிறது. தென்னை மரங்கள், வாழை மரங்கள், பயிர்கள் அழிந்து போயிருக்கிறது. 8 மாவட்ட மக்கள் உணவு, தண்ணீர் இன்றி, வாழ இடமின்றி நடுத்தெருவில் நிற்கும் கொடுமை நடந்துகொண்டிருக்கிறது.
முதல்வர் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றிருக்க வேண்டும். சேலத்தில் ஆடம்பரமான அரசு விழாக்களில் கலந்துகொண்டுள்ளார்.
முதல்வர் ஏன் செல்லவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பியவுடன், 5 ஆம் நாளான இன்று ஹெலிகாப்டர் மூலம் குறிப்பிட்ட 2-3 இடங்களுக்கு அமைச்சர்கள், காவலர்கள் புடை சூழ சென்றிருக்கிறார்.
முதல்வர் எங்கு இருக்கிறார் என்று பார்க்கக் கூட முடியாத நிலை. அவரை ஆளுங்கட்சியினர் சூழ்ந்திருக்கின்றனர். நலத்திட்ட உதவிகளை விளம்பரத்திற்காகக் கொடுத்திருக்கிறார்.
பின்னர் மழையைக் காரணம் காட்டி சென்னை திரும்பிவிட்டார். மழை காரணத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அங்கே தங்கி  பார்வையிட்டிருக்க வேண்டும். புயல் நிவாரணப் பணிகளில் அரசு எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை''.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: