ஞாயிறு, 18 நவம்பர், 2018

ஜாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்தும் கம்யுனிஸ்டுகள் காங்கிரஸ் அதிமுக மற்றும் பலரும் ....

கோயில்பட்டி ஒரு உதாரணம் : 2016 தேர்தலில் திமுக கோவில்பட்டித் தொகுதியில் நாயுடு சாதி அல்லாதவரை நிறுத்தி தோல்வியைத் தழுவியது.அதே தொகுதியில் காலம்காலமாக வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியல் ..
No automatic alt text available.Ravishankar Ayyakkannu : கேள்வி: திராவிடக் கட்சிகள் ஏன் சாதி பார்த்து வேட்பார்களைப் பார்த்து நிறுத்துகின்றன?
பதில்: கோவில்பட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்களின் சாதிகள் குறித்த இந்தப் படத்தைக் காணுங்கள்.
காங்கிரசு, கம்யூனிஸ்ட், அதிமுக அனைத்தும் ஒரே சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற வைத்துள்ளன.
இதற்குப் பெயர் Systemic bias.
அதாவது ஒரு சமூகத்தில், பணியிடத்தில் இயல்பாக ஆதிக்கம் செலுத்துபவர்கள் யாராக இருக்கிறார்களோ அவர்கள் தான் அதிகாரத்தையும் கைப்பற்றுவார்கள்.
இதே கோவில்பட்டி தொகுதியில் 13 தேர்தல்களில் 1 முறை தான் பெண் வென்றுள்ளார்.
எனவே, இந்தக் கட்சிகள் எல்லாம் பெண்களுக்கு எதிரானவை என்ற முடிவுக்கு வரலாமா?
இல்லை.
திராவிடக் கட்சிகள் பெண்கள் முன்னேற்றத்துக்கு எவ்வளவோ செய்துள்ளன. ஆனால், அவற்றைச் செய்யக்கூட முதலில் ஆண்கள் வெற்றி பெற்று தான் அந்தத் திட்டங்களையும் சட்டங்களையும் கொண்டு வர வேண்டி இருக்கிறது.
ஒரு வேட்பாளரின் செல்வ வளம், பாலினம், மதம், சாதி, கட்சியினர்/பொதுமக்களிடம் உள்ள செல்வாக்கு என்று பல்வேறு காரணிகள் தேர்தல் வெற்றிக்குக் காரணமாக உள்ளன.

தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நினைப்பு உடைய எந்த ஒரு கட்சியும் இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் இயங்க முடியாது.
சொல்லப் போனால், இரு பெரும் கட்சிகள் ஒரே பின்னணி உடையவர்களை வேட்பாளர்களாக நிறுத்தும் போது, அங்கு கட்சிகளின் செயற்பாடுகள், கொள்கைகளின் அடிப்படையில் தான் வாக்களிப்பார்களே தவிர பின்னணியைப் பார்த்து கிடையாது. முள்ளை முள்ளால் எடுப்பது போன்றது இது.
அதெல்லாம் தெரியாது, கட்சித் தலைமை யாரை வேண்டுமானாலும் நிறுத்தி, அவருக்குப் பணம் செலவழித்து வெல்ல வைக்க வேண்டும் என்றால் கொஞ்சம் கூட உட்கட்சி ஜனநாயகம் இல்லாத, பணத்தைக் கொள்ளையடித்துக் குவித்து வைத்திருக்கிற கட்சியால் தான் அதனைச் சாதிக்க முடியும்.
அமைப்பு முழுமையிலும் உள்ள சாய்வினை நேராக்க அமைப்பு முழுமைக்குமான தீர்வுகளே தேவை.
A systemic intervention is needed to rectify systemic bias.
இந்தியாவைப் பொருத்தவரை இட ஒதுக்கீடு தான் அந்தத் தீர்வு.
அதனால் தான் உள்ளாட்சிப் பதவிகளில் பெண்கள் இட ஒதுக்கீடும், சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல்களில் SC/ST இட ஒதுக்கீடும் செயற்படுத்தப்பட்டிருக்கிறது.
எப்படி கல்லூரி நுழைவில் அனைத்துச் சாதியினரும் பொதுப் பிரிவில் வெற்றி பெறும் நிலையை எட்டி இருக்கிறோமோ, அது போல் தேர்தல் முடிவுகளும் அமையும் வகையில் சமூகம் முன்னேறும் வரையில்,
தேர்தலில் யார் நிற்கிறார்கள் என்பது என் பிரச்சினை இல்லை. அவர் வென்றால் அவரது கட்சியின் ஆட்சி என்ன செய்யும் என்பது தான் என் பிரச்சினை.
பின் குறிப்பு:
2016 தேர்தலில் திமுக கோவில்பட்டித் தொகுதியில் நாயுடு சாதி அல்லாதவரை நிறுத்தி தோல்வியைத் தழுவியது.

கருத்துகள் இல்லை: