திங்கள், 19 நவம்பர், 2018

திமிரு புடிச்சவன்’ படத்தின் கதைக்கரு என்னுடையது! - 'கிரைம் நாவல் மன்னன்' ராஜேஷ் குமார் வேதனை

'திமிரு புடிச்சவன்’ படத்தின் கதைக்கரு என்னுடையது! - 'கிரைம் நாவல் மன்னன்' ராஜேஷ் குமார் வேதனை/tamil.indianexpress.com/ : அந்தக் கருவை அப்படியே காப்பி அடித்து 'திமிரு பிடித்தவன்' திரைப்படத்தை எடுத்துள்ளார்கள். ‘திமிரு புடிச்சவன்’ படத்தின் கதைக்கரு என்னுடையது. அதனைத் திருடி அந்தப் படத்தை எடுத்துள்ளனர் என கிரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ் குமார் குற்றம் சாட்டியுள்ளார். விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள ‘திமிரு பிடிச்சவன்’ படத்தை கணேசா என்பவர் இயக்கியுள்ளார். இப்படம், நேற்றுமுன்தினம் (நவ. 16) ரிலீசானது. இந்நிலையில், இந்தப் படம், தன்னுடைய கதைக்கருவைத் திருடி எடுத்த படம் எனக் குற்றம் சாட்டியுள்ளார் பிரபல க்ரைம் நாவல் எழுத்தாளரான ராஜேஷ் குமார்.
இதுதொடர்பாக ராஜேஷ்குமார் தன் ஃபேஸ்புக் பதிவில், இவர்கள் திருந்தவே மாட்டார்களா?
 சென்ற வருடம் நான் oneindia வில் எழுதிய ஆன் லைன் தொடர் “ஒன்+ஒன் =ஜீரோ” தொடர்கதையின் அடிப்படை கருவான 18 வயதுக்கு குறைவான சிறுவர்களை Brian wash செய்து தமக்கு வேண்டாதவர்களை கொலை செய்து சட்டத்தின் பிடியில் இருந்து சமூக விரோதிகள் எப்படி தப்பித்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி எழுதியிருந்தேன்.

அந்தக் கருவை அப்படியே காப்பி அடித்து  திமிரு பிடித்தவன்’ திரைப்படத்தை எடுத்துள்ளார்கள்.
இவர்கள் எப்போது திருந்துவார்கள்? மனம் நிறைய வருத்தம்.என்று பதிவிட்டுள்ளார்
 ஏற்கனவே சர்கார் கதை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து, பிறகு 96 படத்தின் கதையும் காப்பியடிக்கப்பட்டது என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ‘திமிரு புடிச்சவனின் கதைக்கரு என்னுடையது’ என்று பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.<

கருத்துகள் இல்லை: