Ajeevan Veer :
இன்றைய சூன்ய சந்திப்பும்
நாளை சூடாகப் போகும் பாராளுமன்றமும்!
113 பாராளுமன்ற உறுப்பினர்களோடு வந்து எமது பலத்தை நிரூபிக்கலாம்!
பாராளுமன்றத்தின் செயல்பாட்டின் சரி - தவறை தீர்மானிப்பதற்கு ஜனாதிபதிக்கோ அல்லது நீதித்துறைக்கோ உரிமை இல்லை!
இறுகிப் போன சிரிசேன...!
இன்றைய சந்திப்பில் விமல் வீரவங்ச தர்க்க ரீதியாக பேசத் தொடங்கியபோது ... எங்களிடம் ஒரு ஆட்சிக்கு தேவையான 113 பேரது பலம் உள்ளது. எங்களுக்கு ஒரு நேரத்தை ஒதுக்கித் தாருங்கள். நாளை ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் வந்து உங்கள் முன் நிற்கிறோம் என இன்று நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் அனைத்து கட்சி பேச்சு வார்த்தையின் போது ஐதேகவினர் சிரிசேனவின் முகத்துக்கே தெரிவித்தார்கள்.
ஆனால் எல்லா பிரச்சனைக்கும் காரண கர்த்தாவான சிரிசேன தனக்கு எதுவுமே தெரியாதவர் போல உள்ள பிரச்சனையை தீர்ப்பதற்கு பதிலாக அதை மேலும் வளர்ப்பதற்கே முயல்வதாக அங்கிருந்தோர் தெரிவிக்கிறார்கள்.
இன்றைய சந்திப்பில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி சிரிசேன , ரணில் மற்றும் மகிந்த ஆகியோர் கடந்த அக்டோபர் 26ம் திகதிக்கு பின் சந்தித்த முதல் சந்திப்பு இதுவாகும்.
அவர்களோடு மகிந்த ஆதரவு தரப்பும் , ரணிலுக்கு ஆதரவான தரப்பும் கலந்து கொண்டனர். ஜேவீபியினர் கலந்து கொள்ளவில்லை. ஆனால் கலந்து கொள்ள விரும்பாமைக்கான காரணத்தை கடுமையான தொனியோடு ஒரு மடலை அனுப்பி வைத்திருந்தனர்.
இங்கு ரணில் தரப்பைச் சேர்ந்தவர்கள் தாங்கள் இரு முறை மகிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்து வெற்றி பெற்றுள்ளதை குறிப்பிட்டனர். இவை கென்சாட்டில் பதிவாகியுள்ளது எனவும் குறிப்பிட்டனர்.
இனி செய்ய வேண்டியது இந்த நம்பிக்கை இல்லா பிரேணைக்கு எதிராக மகிந்த தரப்பு 76(1) ன் கீழ் இந்த முடிவுக்கு எதிராக ஒரு பிரேணையைக் கொண்டு வரலாம். அது தோற்கடிக்கப்படுமானால் மீண்டும் அரசியலமைப்பு சட்டத்தின் 48(2) ன் கீழ் மகிந்த தரப்பினால் ஒரு அரசை கொண்டு செல்ல முடியாது என்பது சுட்டிக் காட்டப்பட்டது.
இதனிடையே " நீங்கள் கௌரவமான ஒரு அரசியல்வாதி. பெரும்பான்மை பலம் இல்லாமல் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருக்க முயல்வது உங்கள் பெயருக்கு களங்கம் விளைவிக்கும். அதைக் கருத்தில் கொண்டு ஏன் நீங்கள் ராஜினாமா செய்யாமல் இருக்கிறீர்கள்?இதனால் பெரும் பிரச்சனையொன்று நாட்டில் உருவாகியுள்ளது. இதை நாடும் உலகமும் அறியும் " என மகிந்தவை பார்த்து கிரியல்ல சொன்னார். மகிந்த எதுவித பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
பாராளுமன்றத்தின் சரி - பிழைகளை முடிவு செய்ய பாராளுமன்றத்தால் மட்டுமே முடியும். அதை கட்டுப்படுத்த ஜனாதிபதியின் அதிகாரத்துக்கோ அல்லது நீதிமன்றத்துக்கோ முடியாது.
பாராளுமன்றத்தின் இறுதி முடிவு சபாநாயகரால்தான் எடுக்கப்படுகிறது.
அதனடிப்படையில் இரு நம்பிக்கை இல்லா பிரேரணைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன் பின் அரசியலமைப்பு சட்டத்தின் 48 (2)ன் பிரகாரம், மகிந்த அரசின் பிரதமர் பதவியும், அவரோடு கூடிய அமைச்சரவையும் கலைக்கப்பட்டுள்ளது. அதன்பின் பெரும்பான்மை உள்ள தரப்பை அழைத்து அவர்களது கையில் ஆட்சியை ஒப்படைப்பதுதான் என ரணில் தரப்பினர் சிரிசேனவுக்கு தெளிவுபடுத்தினர்.
இதனிடையே 9ம் வகுப்பு விமல் வீரவங்ச "அப்படியானால் ரணிலை பிரதமராக்கச் சொல்லி கையெழுத்திட்ட 113 பேரது சத்தியக் கடதாசிகளை ஒப்படைத்து ரணிலை பிரதமராக்கிக் கொள்ளுங்கள்" என்றார்.
அவரது கருத்து அவரது வாயிலிருந்து வெளியானவுடன் "சரி! ஜனாதிபதி அவர்களே நாளை காலை 10 மணிக்கு எங்களுக்கு நேரம் ஒதுக்குங்கள். நாங்கள் 113 பேரது கையெழுத்தோடு அவர்களையும் அழைத்துக் கொண்டு நேரடியாக ஜனாபதி செயலாளர் காரியாலயத்துக்கு வருகிறோம்" என்று அஜித் பெரோரா சொன்னார்.
ஐதேக வசம் இப்போது 118 பேர் ஆதரவாக இருக்கிறார்கள்.
இந்த சங்கடமான நிலையில் முழி பிதுங்கிய சிரிசேன சற்று அமைதியாக இருந்து விட்டு " இந்த பிரச்சனையை நீங்கள் பாராளுமன்றத்திலேயே தீர்த்துக் கொண்டால் நல்லது " என தடம் மாறினார். அதைக் கேட்ட ரணில் சார்ந்தோர் வாய் விட்டு சிரித்தனர்.
அதன்பின் இரவு யோசித்து விட்டு காலையில் அழைத்தால் கூட நாங்கள் வரத் தயார் என ரணில் தரப்பினர் சொன்னார்கள்.
கடைசியில் பேச்சு வார்த்தை என்பது வெறுமனே சந்திப்பாகிப் போய் எல்லோரும் எழுந்து செல்ல முற்படுகையில் தமது தரப்பினரை நிற்குமாறு சிரிசேன சைகை செய்துள்ளார்.
அதிலிருந்தே நாளையும் ஒரு கலவர பூமியாக பாராளுமன்றம் இருக்கும் என ஊகிக்க முடிகிறது.
So much at stake, US warns Sri Lanka
There may be consequences for current and future defence and security projects between Sri Lanka and the United States if the Sri Lankan government does not uphold the law and democratic principles, the US Embassy said.
In August, the US State Department announced it would provide $39 million – pending Congressional approval – to the Sri Lankan military. The funding comes as a part of a broader initiative to strengthen security relationships with south and south-east Asian states. The funding is designed to enhance maritime security, humanitarian assistance and disaster response, peacekeeping capabilities and countering transnational crime capabilities in these countries.

The US also handed over an ex-US Coast Guard cutter to the Sri Lanka
Navy in August. Once recommissioned, the 115m vessel would be the
largest ship in the Lankan fleet.
“This is obviously a critical time for the country and the United States is paying acute attention to unfolding events,” US Embassy spokesperson David J. McGuire said.
“With regard to ongoing or future projects and funding, we do not want to prejudge how the current political situation may be resolved and it is too soon to speculate on what consequences may come as a result. “There is so much at stake,” he continued. “Sri Lanka has made great gains in terms of security, prosperity, and reconciliation. The US will continue to urge President Sirisena to reconvene parliament immediately to allow the democratically elected representatives of the Sri Lankan people to fulfill their responsibility to affirm who will lead their government.”
Separately, the US Embassy in Colombo said firmly: “President Sirisena’s decision to dissolve the parliament poses a vital threat to Sri Lanka’s democratic institutions.” The US State Department also tweeted deep concern “as a committed partner of Sri Lanka” after parliament was dissolved.
The US has actively engaged with Sri Lanka on security and military collaboration since the end of the civil war in 2009. The US, Japan and Australia have increased their military diplomacy with Sri Lanka.
Along with India, they have all expressed concern regarding Chinese investment into Sri Lankan strategic infrastructure, especially the maritime infrastructure such as Hambantota Port.
The government of President Maithripala Sirisena and Prime Minister Ranil Wickremesinghe had issued assurances that Sri Lanka would remain neutral.
US foreign policy towards Sri Lanka considerably improved from January 2015, with more direct military-to-military exercises, exchanges and training programs. The US Marine Corps played an instrumental role in the genesis of the Sri Lankan Navy Marine Battalion last year.
The participation of senior US, Japanese and Australian military leadership at key Sri Lankan defence and security seminars during the last two months underscores the importance the countries have placed on ties with Sri Lanka.
By Asiri Fernando

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக