தினமலர் :தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் போட்டி யிடும் தொகுதிகளையும்,
வேட்பாளர் பெயர் பட்டியலையும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தேர்வு செய்து,
டில்லி மேலிடத்திற்கு அனுப்பியுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.க.,
கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு,
தலா, இரு தொகுதிகளும், முஸ்லிம் லீக் கட்சிக்கு, ஒரு தொகுதியும் ஒதுக்கீடு
செய்வது, ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.சமீபத்தில், ஸ்டாலினை, அவரது
இல்லத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலர், சீதாராம் யெச்சூரி,
இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலர், சுதாகர் ரெட்டி ஆகியோர் சந்தித்து,
தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சு நடத்தி உள்ளனர்.
அதேபோல், சென்னை, அறிவாலயத்தில், ஸ்டாலினை, முஸ்லிம் லீக் தலைவர், காதர் மொகிதீன் சந்தித்து, ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்வது குறித்து பேசியுள்ளார். ஏற்கனவே, ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோவும், ஸ்டாலினும் சந்தித்து பேசியுள்ளனர்.அப் போது,வட சென்னை தொகுதியை, வைகோவுக் கும், ஈரோடு தொகுதியை, கணேச மூர்த்திக்கும் ஒதுக்குவது பற்றி பேசப்பட்டு ள்ளது.மேலும், வைகோ, மத்திய அமைச்சராகி, டில்லிக்கு

செல்ல வேண்டும் என்ற, தன்விருப்பத்தையும், ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், அறிவாலயத்தில், ஸ்டாலினை, தமிழக காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசர் சந்தித்து, தொகுதி பங்கீடு குறித்தும், எண்ணிக்கை குறித்தும் பேசினார்.அப்போது, தி.மு.க., தரப்பில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள், வேட்பாளர் கள் பெயர்கள் குறித்து, திருநாவுக்கரசரிடம், ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: திருநாவுக்கரசர், தன் ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரசில் போட்டியிட விரும்புகிற முக்கிய பிரமுகர்களின் பெயர் பட்டியலுடன், அறிவாலயத் திற்கு சென்றார். அங்கு, ஸ்டாலினை சந்தித்து, 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு ஒதுக்கியபடி, 15, 'சீட்' கேட்டுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த ஸ்டாலின், 'காங்கிரஸ் கட்சிக்கு, எந்தந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும்; எந்தெந்த வேட்பாளர்கள் போட்டியிடுவர் என்ற பட்டியல், ஏற்கனவே, காங்., மேலிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது' என்றார்.உடனே, திருநாவுக்கர சர், 'அந்த பட்டியலில் நான் இருக்கிறேனா' என, கேட்டதும், ஸ்டாலின் சிரித்தபடியே, 'நீங்களும் இருக்கிறீர்கள்; ஆனால், உங்களுக்கு, உங்கள் கட்சியில் கடும் எதிர்ப்பு இருக்கிறது' என, கூறியிருக்கிறார்.
இதனால், உஷாரான திருநாவுக்கரசர், காங்.,ல் உள்ள எதிர்கோஷ்டிகளை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்.டில்லி சென்ற திருநாவுக்கரசர், சிதம்பரத்தையும், அவரது மகன் கார்த்தியையும் சந்தித்து பேசியுள்ளார். தொடர்ந்து, கிருஷ்ணசாமி, வசந்தகுமார் போன்றோரையும் சந்தித்து, அவர்களிடம் வெள்ளைக் கொடி காட்டியுள்ளார்.
கார்த்தி சிதம்பரம் பிறந்த நாளை ஒட்டி, தன் ஆதரவு மாவட்ட தலைவர்களை அனுப்பி, அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வைத்துள்ளார். விரைவில்,இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரையும் சந்தித்து, அவர்களிடமும் சமாதானம் பேச தயாராகி உள்ளார்.இவ்வாறு, வட்டாரங்கள் கூறின.
ராமநாதபுரம் திருநாவுக்கரசர்திருப்பூர் இளங்கோவன் சேலம் தங்கபாலு, திருநெல்வேலி பீட்டர் அல்போன்ஸ் கன்னியாகுமரி வசந்தகுமார்விழுப்புரம் ராணி, ஆரணி விஷ்ணுபிரசாத்தென் சென்னை கார்த்தி சிதம்பரம்
- நமது நிருபர் -

காங்கிரசுக்கு தரப்படும்
உத்தேச தொகுதிகள்
ராமநாதபுரம் திருநாவுக்கரசர்திருப்பூர் இளங்கோவன் சேலம் தங்கபாலு, திருநெல்வேலி பீட்டர் அல்போன்ஸ் கன்னியாகுமரி வசந்தகுமார்விழுப்புரம் ராணி, ஆரணி விஷ்ணுபிரசாத்தென் சென்னை கார்த்தி சிதம்பரம்
- நமது நிருபர் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக