ஞாயிறு, 25 நவம்பர், 2018

திருவாரூர் கஜா நிவாரண முகாமில் பெண் உயிரழப்பு .. உணவில்லை போதிய சுகாதாரம் இல்லை ...

 A woman died due to unhygienic in Gaja relief camp ThiruvarurTamil.oneindia.com shyamsundar.:
திருவாரூர் கஜா நிவாரண முகாமில் பெண் ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர்: திருவாரூர் கஜா நிவாரண முகாமில் பெண் ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கஜா புயல் பல லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. கஜா புயலால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.< 10 மாவட்டத்தில் மக்கள் மொத்தமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனால் 2 லட்சம் பேர் வரை தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிகள், அரசு கட்டிடங்களில் உருவாக்கப்பட்டு இருக்கும் தற்காலிக முகாம்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார். ஆனால் இவர்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.

மாற்று உடைகளாக பழைய துணிகள் வழங்கப்படுகிறது. போதிய உணவுகள் வழங்கப்படுவது இல்லை. வழங்கப்படும் உணவுகளும் சுகாதாரமான நிலையில் இல்லை.
இந்த நிலையில் திருவாரூர் கஜா நிவாரண முகாமில் பெண் ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோட்டூர் அருகே கோமளப்பேட்டை முகாமில் இருந்த பக்கிரியம்மாள் (65) பலியாகி உள்ளார். முகாமில் போதிய சுகாதாரம், உணவு இல்லாததால் உடல் நலிவடைந்த பக்கிரியம்மாள் பலி அடைந்ததாக கூறப்படுகிறது.
முகாமிற்கு வந்த போது இவர் நல்ல உடல்நிலையில் இருந்ததாகவும், முகாமில் சாப்பிட்ட உணவு மற்றும் தண்ணீர் காரணமாக உடல் நலிவடைந்து பக்கிரியம்மாள் பலியடைந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: