திங்கள், 26 நவம்பர், 2018

ஜாதிக்கு பாதுகாப்பு அளிக்கும் 13(2), 25(1), 29(1), (2), 368 அரசியல் சட்ட பிரிவுகள் . . 26-நவம்பர் 1957: சட்ட எரிப்பு நாள்.

பழூரான் விக்னேஷ் ஆனந்த் : ‘I shall be the first person to burn the Constitution of India’
Dr Babasaheb. B.R.Ambedkar.
26-நவம்பர் 1957: சட்ட எரிப்பு நாள்
————————————————
இந்திய அரசியல் சட்டத்தின் 13(2), 25(1), 29(1), (2), 368 ஆகிய பிரிவுகள், ஜாதிக்குப் பாதுகாப்பு அளிக்கின்றன. ஜாதியை அடிப்படையாகக் கொண்ட பழக்க வழக்கங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கின்றன. எனவே, தந்தை பெரியார், ஜாதி ஒழிப்புக்காக இந்திய அரசியல் சட்டத்தையே கொளுத்தும் போராட்டத்தை நடத்தினார். அப்போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திராவிடர்கழகத் தோழர்கள் சிறை சென்றனர். 3000 க்கும் மேற்பட்டோர் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றனர். 18 தோழர்கள் வீரமரணமடைந்தனர்.( தோழர் R.S.Mathan)
இந்தச் சட்டம் எழுதியவர்கள் ஆறு பேர்கள் :
1. அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் (பார்ப்பனர்)
2. டி.டி கிருஷ்ணமாச்சாரி (பார்ப்பான்)
3. என்.கோபால்சாமி அய்யங்கார் (பார்ப்பான்)
4. கே.எம். முன்ஷி (வடநாட்டுப் பார்ப்பான்)
5. டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் (ஆதி திராவிடர்)
6. முகமுது சாதுல்லர் (முஸ்லீம்)
அம்பேத்கர் கொஞ்சம் நம் உணர்ச்சியுள்ளவர். அவர் என்னைக் கேட்டார், ‘உன்னுடைய மக்களுக்கு என்ன செய்யவேண்டும்? என்று. நிறைய விவரங்கனையெல்லாம் அவரிடம் கொடுத்தேன். அதையெல்லாம் அவர் பேச ஆரம்பித்தார். உடனே பார்ப்பனர்கள் அவருக்கு வேலை கொடுத்து விட்டார்கள்.

அடிப்படை உரிமைகள் :
13, (2) இப் பாகத்தால் அளிக்கப்படுட உரிமைகளைப் பறிகும் அல்லது சுருக்கும் எதையும் ஒரு இராஜ்யம் இயற்றாலாகது. இப் பகுதியை மீறி இயற்றப்படும் சட்டம் எதுவும் அப்படி மீறிய அறிவிற்குப் பயனற்றதாகும்.
மத சுதந்திர உரிமை:
25 ,(1) அமைதி, நல்லொழுக்கம், ஆரோக்கியம், இவற்றிக்கும் இந்தப் பாகத்திலுள்ள மற்றைய ஷரத்துக்களுக்கும் உட்பட்டு, மக்கள் அனைவரும், மனசாட்சி சுதந்திரத்திற்கும் தடையின்றி எம் மதத்தையும் தழுவுதல், அனுஷ்டித்தல், பரவச் செய்தல் இவை பற்றிய உரிமைக்கும் சமமான பாத்தியதை உடையவராவார்.
பண்பாடு, கல்வி இவை பற்றிய உரிமைகள்:
29, (1) தனிப்பட்ட மொழி, லிபி, அல்லது பண்பாடு இவற்றை ஏற்கெனவே உடையவராய், இந்தியாவின் ஆட்சிப் பரப்பின் அல்லது அதன் ஒரு பாகத்தில் வசிக்கும் குடிகளின் எப் பிரிவினரும் அவற்றைச் சிதையாமல் காக்க உரிமை உள்ளவர் ஆவார்.
மதம், இனம், சாதி, மொழி இவை காரணமாக அல்லது இவற்றுள் எவையேனும் காரணமாக இராஜ்யத்தினால் பராமரிக்கப்பட்ட அல்லது இராஜ்ய நிதிகளிலிருந்து உதவி பெறுகின்ற எந்தக் கல்வி ஸ்தாபனங்களிலும் சேருவதற்கு எக் குடியும் மறுக்கப்படலாகாது.
அரசியலமைப்பின் திருத்தம்:
368. இந்த அரசியலமைப்பின் திருத்தம் அதற்கெனப் பார்லிமெண்ட் சபை ஒன்றில் ஒரு மசோதாவைக் கொண்டுவருவதால் மட்டுமே ஆரம்பிக்கப்படலாம்.
அச்சபை ஒவ்வொன்றிலும் அம்மசோதா அச்சபையின் மொத்த அங்கத்தினர்களில் பெரும்பான்மையோராலும், வந்திருந்து ஓட்டுச் செய்யும் அச்சபை அங்கத்தினர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்குக் குறையாத பெரும்பான்மை யோராலும், நிறைவேற்றப்பட்டால், அது இராஷ்டிரபதியிடம் அவர் அனுமதிக்காகச் சமர்ப்பிக்கப் படவேண்டும், அம் மசோதாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டது இந்த அரசியலமைப்பு அம்மசோதாவின் ஷரத்துக்களின்படி திருத்தம் பெற்றதாகும். இவைபோன்ற இன்னும் பல அனுமதிகள் உள்ளன.
குறிப்பு: இந்த அரசியல் சட்டத்தை உருவாக்கின ஆறுபேர்களில் நான்கு பேர் பார்ப்பனர், இதை நிறைவேற்றிய அரசியல் நிர்ணயசபை என்பது வயது வந்தோரின் வாக்குரிமை பெறாதவர்களை பெரும்பாலும் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களே கொண்டதாகும்.
இந்தச் சட்டத்தில் இந்தமதத்துக்குப் பாதுகாப்பு அளிக்கப் பட்டிருக்கிறது.இந்து மதத்தில் சாதிக்குப் பாதுகாப்பு இருக்கிறது. சாதியைக் காப்பாற்றத்தான் இடமிருக்கிறது. இதை எளிதில் திருத்தியமைப்பதற்கும் சாதி ஒழிப்புக்காரருக்கு வசதியில்லை, வாய்ப்பு இல்லை (368 – ஆவது பிரிவைப் படியுங்கள்)
ஆதலால், சாதியை ஒழிக்க விரும்புகிறவர்கள், தனித் திராவிட நாடு பெற விரும்புகிறவர்கள், தமிழ்நாடு சுரண்டப்படுவதைத் தடுக்க விரும்புபவர்கள் – என்ன செய்வது? இதை எரிப்பதன்மூலம் நம் எதிர்ப்பதைக் காட்டிக்கொள்வதைத் தவிர வேறு வழி என்ன?
- தந்தை பெரியார், ‘விடுதலை’ 17.11.1957

கருத்துகள் இல்லை: