வெள்ளி, 30 நவம்பர், 2018

அன்னை மீனாம்பாள் சிவராஜ் நினைவு தினம் .. பெரியாருக்கு பெரியார் பட்டம் வழங்கிய பெண் பெரியார் !.

Kiruba Munusamy : டாக்டர் அம்பேத்கர் அவர்களால் தங்கை என்று அன்பாக மான ஐயா கலி. பூங்குன்றன் அவர்களையே சாரும்! 06.11.1990 அன்று அன்னை மீனாம்பாள் அவர்கள் கண் பார்வையற்ற நிலையில் இருந்த போதும், அவரின் சமூக-அரசியல் அனுபவங்களை தெளிவாக நினைவுகூர்ந்திருக்கிறார். அவற்றில், நான் குறிப்பெடுத்தது:
அழைக்கப்பட்டவரும், தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களுக்கு 'பெரியார்' என்று பட்டம் வழங்கியவருமான அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்களின் நினைவு தினம் இன்று! அன்னை மீனாம்பாள் என்ற மிகப்பெரும் பெண் ஆளுமையின் வாழ்வனுபவங்கள் அனைத்துமே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. அத்தகைய விலைமதிப்பற்ற செய்திகளை, அவரின் இறுதி காலக்கட்டத்தில் கடைசியாக பேட்டி கண்டு நமக்கு வழங்கிய பெருமை திராவிடர் கழகத் துணைத்தலைவரும், விடுதலை நாளிதழின் பொறுப்பாசிரியரு
1) அம்பேத்கர் குறித்து:
அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் அமைப்பிற்கு (All India Scheduled Caste Federation) உத்திரப்பிரதேசம், வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் எம்.சி.ராஜா அவர்களைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். மத்தியப் பிரதேசத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.
நாங்களும் சென்னையில் மாநாடு கூட்டி டாக்டர் அம்பேத்கர் அவர்களைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தோம். ஆனால், எம்.சி.ராஜா எனக்கு உறவினர் என்பதனால், என் உறவினர்கள் எல்லாம் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்றார்கள். 'நாட்டின் எதிர்காலத்தைப் பார்க்க வேண்டுமா இல்லை சொந்தத்தை பார்க்க வேண்டுமா?' என்று நான் கேட்டேன். பிறகு, தாழ்த்தப்பட்டோர் மாநாடு ஒன்றைக் கூட்டி டாக்டர் அம்பேத்கர் அவர்களைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால், 'நான் கோபக்காரன், எனக்கு இந்தப் பதவி எல்லாம் ஒத்துவராது. நீயே இரு' என்று கூறி எனது கணவர் சிவராஜ் அவர்களைத் தலைவராக நியமித்துவிட்டார். அதைத்தொடர்ந்து, அம்பேத்கர் அவர்களே நாக்பூரில் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்து அதில் சிவராஜ் அவர்களைத் தலைவராக முறைப்படி அறிவித்தார்.
2) பெரியார் குறித்து:
சென்னை பெரம்பூரில் என் தலைமையிலும், பெரியார் தலைமையிலும் ஒரு சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. கடுமையான மழை, தாழ்த்தப்பட்டோர் பகுதி என்பதால் ஒரே சேறும் சகதியுமாகிவிட்டது. திருமணம் முடிந்து சாப்பிட்டுப் போகச் சொன்னார்கள். நான் ஏதோ சமாதானம் சொல்லி சாப்பிடவில்லை. ஆனால், பெரியார் அவர்களோ, மேலே இருந்த ஓலையைக் கீழே எடுத்துக் போட்டு அப்படியே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டார். காந்தியாருக்கு மகாத்மா என்ற பட்டம் கொடுத்து அழைக்கிறார்கள்; நாம் நம் மக்களுக்காக எல்லாவற்றிலும் முன்னின்று பாடுபடுகிற ஈ.வெ.ரா. அவர்களுக்கு ஒரு பட்டம் கொடுத்து அழைக்க வேண்டுமென்று நான், நாராயணி அம்மாள், டாக்டர் தருமாம்பாள் ஆகியோர் பேசிக் கொண்டோம். அப்பொழுது தான் "பெரியார்" என்று அழைக்க முடிவு செய்து, பிறகு பெண்கள் மாநாடு ஒன்றைக் கூட்டி பெரியார் என்று பட்டம் கொடுத்தோம். அதை என் வாழ்நாளில் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக நான் கருதுகிறேன்.

கருத்துகள் இல்லை: