சனி, 1 டிசம்பர், 2018

மருத்துவக் காப்பீடு: ரூ.5 லட்சமாக அதிகரிப்பு!.. Flashback ..கலைஞர் காப்பீடு திட்டம்

மருத்துவக் காப்பீடு: ரூ.5 லட்சமாக அதிகரிப்பு!கலைஞர் காப்பீடு திட்டம் என்பது தமிழ்நாட்டில் ஏழை மக்கள், உயிருக்கு
ஆபத்தான 51 நோய்களுக்கு, Indian Rupee symbol.svg 1,00,000 (ஒரு இலட்சம்) வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகப் பெற வகை செய்யும் ஒரு காப்பீட்டுத் திட்டமாகும். ஜூலை 2009ல் கலைஞர்  தலைமையிலான திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் ஜூன் 2011ல் ஜெ. ஜெயலலிதாவின் அதிமுக அரசால் விலக்கிக்கொள்ளப்பட்டது. தற்போது இத்திட்டம் கூடுதல் பலன்களுடன் திருந்திய வடிவில், தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் 2011(Chief Minister's Comprehensive Health Insurance Scheme, 2011) என்ற பெயரில் மாற்றி அமைக்கப்பட்டு சூலை 2011 ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது
கலைஞ‌ர் கா‌ப்‌பீடு ‌தி‌ட்ட‌த்த‌ி‌ல் 1.34 கோடி குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு அடையாள அ‌ட்டை வழ‌ங்கக‌ப்ப‌ட்டு‌ள்ளது. கா‌ப்‌பீடு ‌நிறுவன‌ம் மூல‌ம் ரூ.415 கோடி மரு‌த்துவமனை‌க்கு வழ‌‌‌‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
மின்னம்பலம்: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.2 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
இதுதொடர்பாக தமிழக அரசு இன்று (நவம்பர் 30) செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைத்திட வேண்டும் என்ற நோக்கில், 2012ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை தொடங்கிவைத்தார்.

2012ஆம் ஆண்டு முதல் இதுவரை இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 1.58 கோடி குடும்பங்களுக்கு காப்பீடு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இதுவரை 26.96 லட்சம் நபர்கள் 5,133.33 கோடி ரூபாய் அளவிற்குப் பயனடைந்துள்ளனர்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகள், பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தற்பொழுது வழங்கப்பட்டு வரும் ரூ.2 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகையினை, மேலும் உயர்த்தி வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையினை பரிசீலனை செய்து, ரூ.2 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகையினை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க முதல்வர் பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.58 கோடி குடும்பங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஆண்டொன்றுக்கு ரூ.5 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகைக்கு கட்டணமில்லாமல் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். காப்பீடு தொகை உயர்வு நாளை (டிசம்பர் 1) முதல் அமலுக்கு வருவதாகவும் அந்தச் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: