தீக்கதிர் : ;லக்னோ:
மனிதர்களில் சாதி பிரிக்கும் சங்-
பரிவாரங்கள், தற்போது கடவுள்களிலும் சாதியைத் தோண்டிப் பார்த்து வருகின்றனர். அந்த வகையில்தான், ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில், பாஜக-வுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்த உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத், ‘கடவுள் அனுமன் ஒரு தலித்’ என்று கண்டுபிடித்துக் கூறியுள்ளார்.“அனுமன் ஒரு காட்டுவாசி. ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர். அவர் ஒரு தலித். இந்தியாவை வடக்கிலிருந்தும் தெற்குவரையும், கிழக்கிலிருந்து மேற்குவரையும் இணைப்பதற்காக அவர் பாடுபட்டார். ராமரின் விருப்பத்தை நிறைவேற்றவே அவர் இவ்வாறு செய்தார். அந்த அனுமனைப் போல நாமும் ராமரின் விருப்பதையே நிறைவேற்ற வேண்டும். ராம பக்தர்களுக்கே (பாஜக-வுக்கு) வாக்களிக்க வேண்டும். ராவணர்களுக்கு அல்ல” என்று ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
அவரின் இந்தப் பேச்சுதான் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. கடவுள்களிலும் சாதி கண்டுபிடிக்கும் செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவிக்கத் துவங்கியுள்ளன. இந்நிலையில், சங்-பரிவாரங்களுடன் நெருக்கமாக இருக்கும், ராஜஸ்தான் சர்வ பிராமணர் மகாசபையும், ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளது. அனுமனை தலித் என்று குறிப்பிட்டதை ஏற்கமுடியாத இந்த மகாசபையின் தலைவர் சுரேஷ் மிஸ்ரா, ஆதித்யநாத் தனது பேச்சை திரும்பப் பெற்று, 3 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக